ஹாலிவுட்டின் முன்னாள் கதாநாயகி “லாரன் பகால்” மாரடைப்பால் மரணம்!

|

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஹாலிவுட் பட உலகின் பழம்பெரும் நடிகையான லாரன் பகால் நேற்று இறந்தார். 89 வயதான இவர் நியூயார்க் நகரில் உள்ள தன்னுடைய வீட்டில் இருந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

 ஹாலிவுட்டின் முன்னாள் கதாநாயகி “லாரன் பகால்” மாரடைப்பால் மரணம்!

1944 இல் "டு ஹேவ் அண்ட் நாட் ஹேவ்" என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமான இவர் தன் கணவரும், நடிகருமான ஹம்ரி போகார்ட் உடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.இவரின் கணவர் ஹம்ரி போகார்ட் 1957 இல் இறந்து விட்டார்.

இதற்கிடையே அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரில் நேற்று முன்தினம் மர்மமான முறையில் இறந்த ஹாலிவுட்டின் காமெடி நடிகர் ராபின் வில்லியம்ஸ் 63 தன் மணிக்கட்டை கத்தியால் வெட்டி ரத்தத்தை வெளியேற்றிய படி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment