ஆமீரின் நிர்வாண போஸ்டர்: படம் பிடிக்காவிட்டால் பார்க்காதீர்கள், தடை விதிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட

|

டெல்லி: ஆமீர் கான் நிர்வாணமாக போஸ் கொடுத்த பி.கே. படத்திற்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

ஆமீர் கான் நடித்து வரும் பி.கே. படத்தின் போஸ்டருக்கு நிர்வாணமாக போஸ் கொடுத்தது பெரும் சர்ச்சையை கிளப்பியது. ஆமீர் கான் மீது இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டது.

ஆமீரின் நிர்வாண போஸ்டர்: படம் பிடிக்காவிட்டால் பார்க்காதீர்கள், தடை விதிக்க முடியாது- சுப்ரீம் கோர்ட

இந்நிலையில் ஆமீரின் பி.கே. படத்திற்கு தடை விதிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஒருவர் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் படத்திற்கு தடை விதிக்க மறுத்துவிட்டனர்.

இது குறித்து நீதிபதிகள் கூறுகையில்,

உங்களுக்கு பிடிக்காவிட்டால், படத்தை பார்க்காதீர்கள். ஆனால் அதில் மத விஷயத்தை கொண்டு வராதீர்கள். இந்திய சமூகம் பக்குவம் அடைந்தது. அதற்கு பொழுதுபோக்கிற்கும், பிறவற்றுக்கும் இடையே உள்ள வித்தியாசம் தெரியும் என்றனர்.

 

+ comments + 2 comments

Anonymous
14 August 2014 at 21:24

SHAME
WE HATE THIS ACTOR FOR HIS IRRESPONSIBLE ACT

Anonymous
14 August 2014 at 21:25

AMIR does not care for society
let him go to forest and live

Post a Comment