மும்பை: பிரபல டான்ஸ் மாஸ்டரான சரோஜ் கானை தனது ஹேப்பி நியூ இயர் படத்தில் கிண்டல் செய்யவில்லை என்று இயக்குனரும், டான்ஸ் மாஸ்டருமான ஃபரா கான் தெரிவித்துள்ளார்.
ஃபரா கான் தான் இயக்கிய ஹேப்பி நியூ இயர் படத்தில் தன்னை கிண்டல் செய்துள்ளதாக பிரபல பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் சரோஜ் கான் தெரிவித்தார். இதனால் அவர் ஃபரா மீது கோபத்தில் உள்ளார்.
இந்நிலையில் இது குறித்து ஃபரா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
சரோஜ் கான் ஒரு மேதை. அவரிடம் இருந்து தான் நான் கற்றுக் கொண்டேன். அவரை என் படத்தில் கிண்டல் செய்யவில்லை. அவரை மனதார நேசிக்கிறேன். படத்தில் அவரை கிண்டல் செய்திருப்பதாக அவர் நினைத்தால் அது உண்மை இல்லை அவரை நாங்கள் மிகவும் நேசிக்கிறோம் என்றார்.
ஷாருக்கான், தீபிகா, அபிஷேக் பச்சன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ஹேப்பி நியூ இயர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment