தென்றல் தொடரின் புஜ்ஜிம்மாவாக வந்து கலக்கியவர் சின்னத்திரை நடிகை தேவிக்ருபா.
எத்தனையோ சீரியல்களில் நடித்திருந்தாலும் புஜ்ஜிம்மாதான் சின்னத்திரை ரசிகர்களிடம் தேவிக்ருபாவை அடையாளப்படுத்தியது.
எட்டாவது படிக்கும்போதே நிகழ்ச்சித்தொகுப்பாளினியாக டிவி சேனலுக்குள் நுழைந்த தேவிக்ருபா, சீரியல், சினிமா என்று கலக்கிக் கொண்டிருக்கிறார். ஆனால் அவருக்கு இதுவரை காதல் அனுபவமே ஏற்பட்டதில்லையாம். அப்படி என்றால் என்ன? அது எப்படி இருக்கும் என்று கேட்கிறார்.
தமிழின் பெரும்பாலான முன்னணி தொலைக்காட்சிகளில் இவர் நடித்த சீரியல்கள் ஒளிபரப்பாகியுள்ளன. இவருடைய தம்பி கோகுலும் சீரியல் நடிகர்தான். தற்போது சன்டிவியின் தேவதை சீரியலில் நடித்து வருகிறார் கோகுல். ஒரே வீட்டில் இரண்டு நடிகர்கள் இருக்கின்றனர்.
சீரியல் பயணம்
"இணைக் கோடுகள்', "ஆனந்தம்', "தீர்க்க சுமங்கலி', "கஸ்தூரி' ஆகிய சீரியல்களில் நடித்த தேவிக்ருபா, "பயமறியான்' படத்தில் இரண்டாவது நாயகியாக நடித்தார்.
ரசிகர்களின் புஜ்ஜிம்மா
சினிமாவிற்காக சில காலம் சீரியலுக்கு லீவ் விட்ட தேவிக்ருபா,மீண்டும்"தென்றல்' சீரியலில் புஜ்ஜிமாவாக நடித்து சின்னத்திரை ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.
வரிசைகட்டும் சீரியல்கள்
தென்றலைத் தொடர்ந்து,"புகுந்த வீடு', "மாமா மாப்ளே', "மை நேம் இஸ் மங்கம்மா', "மாயா', "பிள்ளைநிலா' என சீரியல் பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தெலுங்கிலும் ஏகப்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார் தேவிகிருபா.
ஹீரோவின் தங்கை
"தற்போது "இலக்கணமில்லா காதல்' என்ற படத்திலும், ஜெய் ஆகாஷுக்கு தங்கையாக ஒரு படத்திலும், ஜோடியாக ஒரு படத்திலும் நடித்திருக்கிறாராம் தேவிகிருபா.
காதல் திருமணம்தான்
சின்ன வயதில் இருந்து மீடியாவில் இதுவரை காதல் மனுக்கள் எதுவும் வரவில்லையாம்.ஆனால், கண்டிப்பாக காதல் கல்யாணம்தான். ஆனால், காதல் எப்படி வரும்னுதான் தெரியலை என்கிறார். அந்த அளவிற்கு நீங்க வெகுளிப் பொண்ணா தேவிக்ருபா?
Post a Comment