மீண்டும் 'வாலு' தள்ளிப் போனது: ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றாததை நினைத்து சிம்பு வருத்தம்

|

சென்னை: என் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்க தவறியதில் வருத்தமாக உள்ளது என்று வாலு பட ரிலீஸ் தள்ளிப்போனது பற்றி சிம்பு தெரிவித்துள்ளார்.

சிம்பு, ஹன்சிகா, சந்தானம் நடித்துள்ள வாலு படம் ரிலீஸாகாமல் இழுத்துக் கொண்டே உள்ளது. இந்நிலையில் தான் படம் கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக டிசம்பர் 24ம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது பட ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போயுள்ளது.

மீண்டும் 'வாலு' தள்ளிப் போனது: ரசிகர்களை நினைத்து சிம்பு வருத்தம்   | ஹன்சிகா  

படம் சிம்புவின் பிறந்தநாளையொட்டி பிப்ரவரி மாதம் 3ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சிம்பு கூறுகையில்,

ஒரு நடிகராக நடிப்பது, ஐடியாக்கள் கொடுப்பது தான் என் பணி. படத்தின் வர்த்தகம் தொடர்பான விஷங்களில் நான் தலையிடுவது இல்லை. என் ரசிகர்களின் ஆசையை நிறைவேற்றி வைக்காததால் நான் அதிருப்தி அடைந்துள்ளேன். ஆனால் இது தான் பிசினஸ் சட்டம். அதை நான் மதிக்கிறேன். வருத்தம் இருந்தாலும் 2015ம் ஆண்டை நான் வாலு படத்துடன் வரவேற்கிறேன்.

அந்த படத்தை அடுத்து இது நம்ம ஆளு ரிலீஸ் ஆகும் என்றார்.

அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் 2015ம் ஆண்டின் துவக்கத்திலேயே 2 சிம்பு படங்கள் ரிலீஸாகும்.

 

Post a Comment