இனி கதைத் திருட்டு என்று யாரைவது பிரச்சினை செய்தால்.... - சரத்குமார் எச்சரிக்கை

|

சென்னை: இனி கதைத் திருட்டு என்று பிரச்சினை செய்தால் சினிமா உலகம் ஒன்று திரண்டு போராடும் என்று நடிகர் சரத்குமார் கூறினார்.

சரத்குமார் கதாநாயகன்-வில்லன் ஆகிய 2 வேடங்களில் நடிக்கும் படம் ‘சண்டமாருதம்'. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா, தனுஷ் நடிக்கும் ‘மாரி', விக்ரம் பிரபு நடிக்கும் ‘இது என்ன மாயம்' படங்களின் தொடக்க விழாவும் சென்னையில் நேற்று காலை நடந்தது.

இனி கதைத் திருட்டு  என்று யாரைவது பிரச்சினை செய்தால்.... - சரத்குமார் எச்சரிக்கை

‘சண்டமாருதம்' படத்தில் பாடல்களை பட அதிபர் ஆர்.பி.சவுத்ரி வெளியிட்டார்.

விழாவில் தென்னிந்திய நடிகர் சங்க பொதுச்செயலாளர் ராதாரவி பேசும்போது, ‘‘தமிழ் பட உலகில் இப்போதெல்லாம் கதைத் திருட்டு என்று அடிக்கடி பிரச்சினை செய்கிறார்கள். என் படத்தில் அம்மா-அப்பா என்று 2 கதாபாத்திரங்கள் வைத்திருந்தேன். அதேபோல் இன்னொரு படத்திலும் அம்மா-அப்பா கதாபாத்திரங்கள் உள்ளன. எனவே என் கதை திருடப்பட்டுள்ளது என்று புகார் செய்கிறார்கள், வழக்கு தொடருகிறார்கள். இதை இனியும் அனுமதிக்க முடியாது,'', என்றார்.

சரத்குமார்

இதைத்தொடர்ந்து, தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் சரத்குமார் பேசுகையில், "சமீப காலமாக கதை திருட்டு என்று அடிக்கடி புகார்கள் வருவதாக ராதாரவி குறிப்பிட்டார். இனிமேல் அப்படி பிரச்சினை செய்தால், நடிகர் சங்கம், தயாரிப்பாளர்கள் சங்கம், இயக்குநர்கள் சங்கம், பெப்சி உள்பட ஒட்டுமொத்த சினிமா உலகமும் ஒன்று திரண்டு போராடும்.

ரசிகர்கள் திருட்டு வி.சி.டி.யில் படம் பார்க்க வேண்டாம். தியேட்டர்களுக்கு சென்று படம் பார்க்கும்படி கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.

சமீபத்தில் வெளியான கத்தி, லிங்கா போன்றவை கதைத் திருட்டுப் புகார்களுக்கு உள்ளாகின.

 

Post a Comment