திருநெல்வேலிக்கு விஜய் சொன்ன விளக்கம்

|

திருநெல்வேலி: திருநெல்வேலி என்ற பெயர் ஏன் வந்தது என விளக்கம் கூறினார் நடிகர் விஜய்.

நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த கத்தி படத்தின் 50 நாள் விழாவில் கலந்து கொண்டார் நடிகர் விஜய்.

கத்தி படம் திருநெல்வேலியைச் சேர்ந்த தன்னூத்து என்ற கிராமத்தை மையமாக வைத்து எடுத்திருந்தனர். விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தது.

திருநெல்வேலிக்கு விஜய் சொன்ன விளக்கம்

எனவே படத்தின் 50 நாள் விழாவை நெல்லையில் நடந்தினர்.

விழாவில் பங்கேற்ற விஜய், திருநெல்வேலி என்ற பெயருக்கான அர்த்தத்தைச் சொன்னார். அவர் பேசுகையில், "ஒரு மனிதனின் அடிப்படைத் தேவைகள் மூன்று. ஊரின் பெயரிலேயே மூன்றும் அமைந்திருப்பது திருநெல்வேலியின் சிறப்பு.

அதாவது "திரு' என்றால் மரியாதை, 'நெல்' என்றால் உணவு, "வேலி' என்றால் பாதுகாப்பு. நெல்லையப்பர் அருள்பாலிக்கும் இந்த ஊரின் சிறப்பை இனிக்கச் செய்யும் "அல்வா' தனிச் சிறப்பு.

விவசாயத்துக்குப் பெயர்பெற்ற இந்த ஊரில், கத்தி திரைப்படத்தின் வெற்றி விழா நடப்பது பொருத்தமானது.

வெற்றி-தோல்வி இடையே மிகவும் சிறிய வித்தியாசம்தான் உள்ளது. கடமையைச் சரியாகச் செய்தால் வெற்றி. கடமைக்காகச் செய்தால் தோல்வி," என்றார்.

 

Post a Comment