ராஜபக்சே பணத்தில் தயாராகும் கத்தி... புதிய சிக்கலில் நடிகர் விஜய்!

|

ஈழப் போராட்டத்தை கொச்சைப்படுத்தி இனம் போன்ற படங்களெடுத்துப் பணம் பார்க்கும் கூட்டம் ஒரு பக்கம்...

ஈழத் தமிழரைக் கொன்று குவித்த ராஜபக்சே மற்றும் அவர் ஆதரவாளர்களுக்கு கைக்கூலிகளாக மாறிய அவரது சில பினாமி தமிழர்கள், அந்த இனப் படுகொலையை மறைக்க திரைத்துறையில் கோடிகளைப் பாய்ச்சும் ஈனத்தனம் மறுபக்கம்..

ராஜபக்சே பணத்தில் தயாராகும் கத்தி... புதிய சிக்கலில் நடிகர் விஜய்!

இந்த இரண்டு வகை துரோகங்களையும் புரிந்து கொள்ளக்கூட முடியாத அளவுக்கு தமிழர்களை அறிவிலிகளாக நினைத்துக் கொண்டு வித விதமான துரோகங்களை அரங்கேற்றிக் கொணடிருக்கின்றன இந்தக் கூட்டங்கள்.

சில தினங்களுக்கு முன் சந்தோஷ் சிவன் என்ற கேரள சினிமாக்காரர் மூலம் தமிழர்களை மிக அசிங்கமாகச் சித்தரித்து இனம் என்ற பெயரில் படமெடுத்தனர், ராஜபக்சே கூட்டத்தினர். அதற்கு தெரிந்தோ தெரியாமலோ உடந்தையாகிப் போனார் லிங்குசாமி.

இப்போது ராஜபக்சேவின் நேரடிக் கூட்டாளியான லைக்கா மொபைல் நிறுவனத்தினர் விஜய் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கும் கத்தி படத்தைத் தயாரிக்கின்றனர்.

லைக்கா மொபைல் நிறுவனம் ஐரோப்பிய நாடுகளில் மிகப் பிரபலமான தொலைத் தொடர்பு நிறுவனம். ராஜபக்சே மகன் நமல்ராஜபக்சே இதன் பார்ட்னர். லைக்கா மொபைல் அதிபரான சுபாஷ்கரன் அல்லி ராஜா தமிழர் என்றாலும், ராஜபக்சேவுக்கு நெருக்கமானவர். இது தெரியாத ஈழத் தமிழர் யாருமிருக்க முடியாது.

இந்த நிலையில் முதலில் ஐங்கரன் நிறுவனம் தயாரிப்பதாகச் சொல்லப்பட்ட விஜய்யின் கத்தி படத்தில், இப்போது லைக்கா மொபைல் நிறுவனமும் இணைந்துள்ளது.

சர்வதேசம் முழுக்க வியாபித்திருக்கும் தமிழர்களும், தமிழ் அமைப்புகளும் இதனை கவனத்துடன் பார்த்து வருகின்றன.

தன்னை ஈழத் தமிழர்களின் காவலனாகச் சித்தரித்துக் கொண்ட (ஒரு காலத்தில்) விஜய்க்கு இந்த உண்மை தெரியாதா? அல்லது தெரிந்தே இப்படியொரு துரோகத்துக்கு துணை போகிறாரா? என்ற கேள்வியோடு இந்தப் படத்தை எதிரக்க தமிழர்கள் தயாராகி வருகின்றனர்.

இதுகுறித்து லைக்கா மொபைல் நிறுவனத்தின் லைக்கா நிறுவனத்தின் செயல் அலுவலர் ரவீந்திரன், "எங்கள் குழுமத்தின் ஒரு அங்கம்தான், இந்த படத் தயாரிப்பு நிறுவனம். கிரிக்கெட் வீரர் சனத் ஜெயசூர்யாதான் எங்கள் சேர்மனின் நண்பர். எங்களை இனத்துரோகி என்று ஒரு சிலர் சொல்வது பற்றி எங்களுக்கு கவலை இல்லை. அரச தரப்போடு இணைந்து போரில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு, உதவிகளைச் செய்து வருகிறோம். இது இனத் துரோகம் அல்ல.

மேற் கொண்டு பேச முடியாது," என்கிறார்.

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்... விஜய்க்கு இந்தப் படம் தலைவாவை விட ஆயிரம் மடங்கு பெரும் தலைவலியாக அமையப் போகிறது என்பது மட்டும் நிஜம்!!

 

+ comments + 1 comments

Anonymous
8 April 2014 at 16:30

Again started
Vijay is non stoppable
Many including media is creating unnecessary
No Major political party has done anything good for lankan Tamils
Why unnecessary problem for vijay
Vijay will be the winner

Post a Comment