துபாய்: மலையாள சினிமா தயாரிப்பாளரான சந்தோஷ் குமார், அவரது மனைவி மஞ்சு மற்றும் மகள் கௌரி ஆகியோர் துபாயில் உள்ள வீட்டில் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார். சவுபர்னிகா பிலிம்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர். அவர் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான மாதம்பி படத்தின் துணை தயாரிப்பாளர். துபாயில் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்த அவர் தனது மனைவி மஞ்சு மற்றும் மகள் கௌரியுடன் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு துபாயில் செட்டில் ஆனார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையில் இருந்து அவரது வீடு திறக்காமல் உள்ளதாக அவரது உறவினர் போலீசாருக்கு தெரிவித்தார். போலீசார் வந்து கதவை உடைத்து பார்த்தபோது சந்தோஷ் குடும்பத்துடன் பிணமாகக் கிடந்தது தெரிய வந்தது. அதிலும் மகள் கௌரியின் உடம்பில் பலமுறை கத்தியால் குத்திய அடையாளம் இருந்தது.
சந்தோஷ் குமார் குடும்பத்தோடு தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சந்தோஷ் நிதி பிரச்சனையால் தான் குடும்பத்தோடு தற்கொலை செய்திருக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.
மூன்று உடல்களும் படுக்கையறையில் அழுகிய நிலையில் கிடந்தன. யாரும் வீட்டை உடைத்து உள்ளே வந்ததற்காகன அடையாளம் இல்லை என்று சந்தோஷ் குடும்ப நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment