சென்னை : புத்த இயக்குநரின் இயக்கத்தில் கோட் நடிகர் நடித்துள்ள படத்தில் கிளைமாக்ஸில் ஹீரோ 'மர்கயா' ஆவது போல் உள்ளதாம். இதைக் கேட்டு நடிகர் அதிர்ச்சி அடைந்து விட்டாராம். காரணம் இந்த முடிவை ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது தான்.
பொதுவாக முழுக் கதையையும் சொல்லாமலேயே படப்பிடிப்பைத் துவக்குவது தான் புத்த இயக்குநரின் வழக்கம். கோட் சூட் நடிகரையும் அப்படியே ஒப்பந்தம் செய்தார். படப்பிடிப்பு தொடங்கிய போதும், நடிகர் நச்சரித்தும் கிளைமாக்ஸ் என்னவென்று சொல்லாமல் இழுத்தடித்து வந்தார் இயக்குநர்.
நிச்சயம் சுவாரஸ்யமான ரசிகர்கள் விரும்பும் கிளைமாக்ஸை இயக்குநர் அமைப்பார் என்ற நம்பிக்கையில் நடிகரும் நடித்து வந்தார். இன்னும் படத்தை எப்படி முடிப்பது என நானே முடிவு செய்யவில்லை என இயக்குநரும் மழுப்பி வந்தார்.
ஒருவழியாக படவேலைகள் முடிந்து படம் தமிழர் திருநாளுக்கு ரிலீசாகிறது. படத்தைப் பார்க்க ரசிகர்களும் ஆவலாக உள்ளனர். ஆனால், படத்தின் கிளைமாக்ஸை ரசிகர்கள் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறார்கள் என கோட் சூட் நடிகர் தான் ரொம்பக் குழப்பத்தில் உள்ளாராம்.
Post a Comment