பலத்த பாதுகாப்புடன் வெளியாகிறது “மெசெஞ்சர் ஆப் காட்” – ஹரியானாவில் உச்சகட்ட பாதுகாப்பு

|

சண்டிகர்: சீக்கியர்களை அவமதிக்கும் வகையிலும், இளைஞர்களுக்கு மூட நம்பிக்கையை போதிக்கும் வகையிலும் படமாகியுள்ளதாக சர்ச்சைக்கு உள்ளான மெசெஞ்சர் ஆப் காட் திரைப்படம் பலத்த எதிர்ப்புக்களுக்கிடையே இன்று வெளியாகின்றது.

பலத்த பாதுகாப்புடன் வெளியாகிறது “மெசெஞ்சர் ஆப் காட்” – ஹரியானாவில் உச்சகட்ட பாதுகாப்பு

தேரே சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம்சிங் என்பவர் தயாரித்து நடித்துள்ள படம் மெசேஞ்சர் ஆப் காட். இத்திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் கடந்த மாதம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும் சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடும் எதிர்ப்புகளுக்கிடையே இத்திரைப்படம் இன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் ரிலீசாக உள்ளதையடுத்து இரு மாநில தியேட்டர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முக்கிய இடங்களில் பாரா மிலிட்டரி படையும் குவிக்கப்பட்டு படம் ரிலீசாகும் தியேட்டர் உள்ள நகரங்களில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

 

Post a Comment