பறக்கப் பறக்க பயமா இருந்துச்சுடா பரமா... அந்தரங்கத்தில் மிதந்த ராய் லட்சுமி!

|

சென்னை: ஸ்கைடைவிங் பண்ணிய அனுபவத்தை நினைத்து இன்னமும் சிலிர்த்துக் கொண்டிருக்கிறார் நடிகை ராய் லட்சுமி. ப்ளைட்டில் இருந்து ஸ்கைடைவிங்கிற்காக குதித்த போது, ‘ஒரு நிமிடம் செத்துப் பிழைத்தது போன்று இருந்ததாம் அவருக்கு

விமானத்தில் இருந்து 15ஆயிரம் அடி உயரத்தில் இருந்து குதித்து, பாராசூட் மூலம் தரை இறங்குவது தான் ஸ்கைடைவிங். உலகத்தின் அத்தனை சாகசங்களையும் செய்து விட வேண்டும் என்ற லட்சியத்தோடு இருக்கிறாராம் ராய் லட்சுமி.

பறக்கப் பறக்க பயமா இருந்துச்சுடா பரமா... அந்தரங்கத்தில் மிதந்த ராய் லட்சுமி!

அதன்படி, இந்த புது வருஷத்தை த்ரில்லோடு ஆரம்பிக்க நினைத்து, வெற்றிகரமாக ஸ்கைடைவிங் முடித்துத் திரும்பியிருக்கிறார். ஸ்கைடைவிங் போது தான் மெர்சலான அனுபவத்தை, ராய் லட்சுமி விகடனுக்கு பேட்டியாக அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது :-

தனி விமானம்...

ஸ்கைடைவிங் பண்றதுக்காக எல்லாரும் துபாய் போனோம். எங்க குடும்பத்துல நிறைய பேர் ஸ்கைடைவிங் பண்ணலாம்னு முடிவு பண்ணினதால, எங்களுக்கே எங்களுக்குனு தனி விமானம் புக் பண்ணோம்.

ஏ டு இசட் செக்கிங்...

ஸ்கைடைவிங் பண்ற நாள் அன்னைக்குக்கு முதல்ல உடம்பை ஏ டு இசட் டாக்டர் செக் பண்ணினார். அந்த டெஸ்ட்ல பாஸ் பண்ண பிறகு, பக்கம் பக்கமா நிறைய டாக்குமெண்ட்ஸ்ல கையெழுத்து வாங்கினாங்க.

தெரியாம வந்து மாட்டிக்கிட்டோமோ...

அது எல்லாத்தையும் படிக்கணும்னா, முழுசா ஒரு வாரம் ஆகும். அத்தனை அக்ரிமெண்ட். என்னென்னமோ எழுதியிருக்கே... தெரியாம வந்து மாட்டிக்கிட்டோமா?னு பயமாக் கூட இருந்தது. அப்புறம் தனி பிளைட்ல ஏத்திட்டாங்க.

பயம்...

டைவிங் சூட், பெல்ட் எல்லாம் கட்டிக்கிட்டு பிளைட்ல ஏறி உட்கார்ந்தோம். அதுக்கு முன்னாடி எத்தனையோ தடவை பிளைட்ல போயிருந்தாலும், அப்போ பிளைட் பறக்க ஆரம்பிச்சப்ப பயம் வயித்தை அடைக்குது.

ரசிக்க முடியாத அழகு...

பிளைட் உயரத்துக்குப் போக போக துபாயின் அழகும், உயர உயரமான கட்டடங்களும் கலர்புல் ட்ரீட்டா இருந்தது. ஆனா, ஸகைடைவிங் பயத்துல அதையெல்லாம் எங்களால ரசிக்க முடியலை.

வெறும் காத்து தான் வந்தது....

இத்தனைக்கும் எங்கக் கூட வந்த ஸ்கைடைவிங் பயிர்சியாளர்கள் எங்க பயத்தைப் போக்க ரொம்ப கேஷுவலா பேசிட்டே வந்தாங்க. ஆனா எங்களுக்கோ பேப்பப்பேனு வெறும் காத்து தான் வந்துச்சு.

பேய் அறைஞ்ச மாதிரி...

அவங்கள்ல ஒருத்தர், ‘கமான் கமான் எல்லாரும் போட்டோ எடுத்துப்போம். யாரும் மிஸ் ஆகக்கூடாது. ஏன்னா இது நம்ம கடைசி போட்டோவாக் கூட இருக்கலாம்'னு சொல்லி சிரிச்சார் பாருங்க...பேய் அறைஞ்ச மாதிரி ஆகிருச்சு. ‘ஹேய் சும்மா கலாட்டா பண்ணினேன். கூல்னு சிரிச்சார்.

யார் பர்ஸ்ட்...

குதிக்க வேண்டிய இடம் வந்ததும், யார் முதல்ல குதிக்கப் போறாங்கனு கேட்டாங்க. அக்கா, பிரண்ட்ஸ் எல்லாரும் என்னை முதல்ல தள்ளி விட்டாங்க.

உயிர்பயம்...

அப்போ கிரவுண்ட்ல இருந்து 15 ஆயிரம் அடி உயரத்துல பறந்துட்டு இருந்தது விமானம். அப்போக் கூட எனக்கு பெரிய பயம் இல்லை. ஆனா, விமானத்தின் கதவைத் திறந்ததும் ‘ஜோஷ்ஷ்..'னு அவ்வளவு வேகமா காத்து உள்ளே வந்துச்சு பாருங்க... உயிர் பயம் என்னனு அப்பத்தான் தெரிஞ்ஸது.

அப்படி ஒரு காற்று...

அடிக்கற காத்துல முகச்சதைகள் எல்லாம் மேலயும், கீழயும் போகுது. எதையும் சரியாப் பார்க்கக் கூட முடியலை. கதவுகிட்ட என்னைத் தள்ளிட்டுப் போய் நிப்பாட்டினாங்க.

ப்ளீஸ்... ஒரு 5 நிமிஷம்...

நான் கதவை இறுக்கமாப் பிடிச்சுட்டு, ‘ப்ளீஸ்... ப்ளீஸ்...அஞ்சு நிமிஷம், அப்புறம் குதிக்கறேன்'னு சொல்றேன். ‘அஞ்சு நிமிஷத்துல மனசு மாறிடுவீங்கனு சொல்லி என்னைத் தள்ளியே விட்டுட்டாங்க.

காப்பாத்துங்க... காப்பாத்துங்க

தள்ளி விட்டுட்டாங்கனு நம்பவே முடியலை. பார்த்தா வானத்துல இருந்து கீழே விழுந்துட்டு இருக்கேன். ‘அய்யோ... காப்பாத்துங்க.. காப்பாத்துங்க'னு அலறிட்டே இருக்கேன். ம்ஹூம் எதுவும் வேலைக்கு ஆகலை.

கூல்... கூல்....

அப்போ, ‘கூல்... கூல்...னு காதுகிட்ட ஒரு சத்தம். பார்த்தா எங்க ஸ்கைடைவிங் பயிற்சியாளர். அவர் என்னைத் தன்னோட கட்டிக்கிட்டுத் தான் குதிச்சிருக்கார், அது எனக்குத் தெரியலை.

தலைகீழ் பயணம்...

பூமியை நோக்கி விர்ர்னு தலைகீழா விழுந்துட்டே இருக்கோம். ரத்தம் எல்லாம் தலைக்கு வந்திருச்சு, முழுசா ஒரு நிமிஷம் கழிச்சுத்தான், நிதானத்துக்கே வர முடிஞ்சது.

ஜாலி...

அப்புறம் ரெண்டு நிமிஷம் கழிச்சு பறவை மாதிரி கை- கால்களை அசைச்சு ஒரு மாதிரி கண்ட்ரோலா பறக்க ஆரம்பிச்சேன். பயம் குறைஞ்சு ஜாலியா ரசிக்க ஆரம்பிச்சேன்.

துபாயின் அழகு...

அந்த உயரத்துல இருந்து துபாய் பனைமரம் போல விரிஞ்சு கிடக்கும் அழகைப் பார்க்கணுமே... சான்ஸே இல்லைங்க. அஞ்சு நிமிஷம் கழிச்சு அந்தரத்துல பறக்கிறோம்னே தோணலை.

அரைமணி நேரப்பயணம்...

அப்படியே பறவையின் இறகு மாதிரி மிதக்க ஆரம்பிச்சிட்டோம். அப்புறம் பாராசூட் விரிச்சு கொஞ்சநேரம் பறந்தோம். அரைமணி நேரத்துல லேண்ட் ஆனோம்.

கால் தான் பிரேக்...

நிலத்துல கால் பதிச்ச பிறகும் பாராசூட் பறந்துட்டே இருந்தது. 300 மீட்டர் வரைக்கும் கால்ல பிரேக் அடிச்சுட்டே போய்த்தான் நிறுத்த முடிஞ்சது.

இன்னொரு தடவை...

அந்த நிமிஷம், ‘இன்னொரு தடவை ஸ்கைடைவிங் பண்ணக் கூடாது'னு தோணுச்சு. ஆனா, இப்போ யோசிச்சா திரும்ப எப்போ ஸ்கைடைவிங் பண்ணுவோம்னு இருக்கு.

அதுக்கும் மேலே...

இதுக்கு முன்னாடி ஸ்கூபாடைவிங், பங்கி ஜம்பிங் எல்லாம் பண்ணியிருக்கேன். ஆனா, ஸ்கைடைவிங் அதுக்கும் மேலே...' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

 

Post a Comment