புது ஹீரோ.. வயசான ஹீரோ வித்தியாசம் பார்க்காத இனியா!

|

வாகை சூட வா, மவுன குரு, நான் சிகப்பு மனிதன் என பெரிய படங்களில் நடித்து நல்ல நடிகை என்று பெயர் வாங்கியவர் இனியா.

ஆனால் நடித்தால் பெரிய நடிகர் அல்லது முன்னணி நடிகருடன்தான் நடிப்பேன் என்ற அடமெல்லாம் இல்லை.

முன்பு 'அந்தக் கால' ராம்கிக்கு ஜோடியாக நடித்தவர், இப்போது புதுமுக ஹீரோ ஒருவருக்கு ஜோடியாக நடிக்கிறார்.

படம் 'காதல் சொல்ல நேரமில்லை'.

புது ஹீரோ.. வயசான ஹீரோ வித்தியாசம் பார்க்காத இனியா!

இப்படத்தில் உதய்குமார் நாயகனாக நடிக்கிறார். சி.எச். ராஜ்குமார் ஒளிப்பதிவை கவனிக்க குமார் பாண்டியன் இசையமைக்கிறார். இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல் எழுதி தயாரித்து இயக்குகிறார் ஸ்ரீநிவாசன்.

படம் பற்றி இயக்குனர் ஸ்ரீநிவாசனிடம் கேட்டோம்.... 'இது ஒரு ஜாலியான கதை! கதாநாயகன் ஒரு பிளேபாய். பார்க்கிற எல்லா பெண்களையும் வசப்படுத்தி விட வேண்டும் என்று நினைபவன். உடன்படாத பெண்களையும் தான் வளைத்து விட்டதாக பொய் சொலிக்கொண்டிருப்பான்.

அந்த பிளேபாய்த்தனம் எப்படியெல்லாம் அவனது வாழ்கையைப் பாதிக்கிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறோம். நாயகன் புதியவர் என்றாலும், கதைப் பிடித்திருந்ததால் சம்மதித்தார் இனியா.

படப்பிடிப்பு சென்னை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கேரளா போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. விரைவில் இப்படம் திரைக்கு வர உள்ளது," என்றார் இயக்குனர்.

 

Post a Comment