சிரஞ்சீவியின் 150 வது படத்தில் நடிக்க ரூ 3 கோடியை சம்பளமாகக் கேட்டு அதிர வைத்துள்ளார் நயன்தாரா.
தென்னிந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் ஒரே நடிகை நயன்தாராதான். தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் அவர்தான் இப்போது டாப்பில் உள்ளார்.
தமிழில் ஏற்கெனவே சிம்புவுடன் நடிக்க ரூ 3 கோடி வரை நயன்தாரா கேட்க, 2.50 கோடிக்கு இறுதியாக ஒப்புக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
தெலுங்கில் அரசியலிருந்து மீண்டும் சினிமாவுக்கு வந்துள்ள சிரஞ்சீவி, தனது 150 படத்தில் நடிக்கிறார்.
இதில் அவருக்கு ஜோடியாக நடிக்க நயன்தாராவை அழைத்துள்ளனர். வாய்ப்பை ஏற்றுக் கொள்வதாகக் கூறிய நயன், தனக்கு சம்பளமாக ரூ 3 கோடி தரவேண்டும் என்றும், அதைக் குறைத்துக் கொள்ள முடியாது என்றும் கறாராகக் கூறிவிட்டாராம்.
இதனால் அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர், நயன்தாராவையே நடிக்க வைக்கலாமா, த்ரிஷா, காஜல் போன்ற வேறு நாயகிகளை அணுகலாமா என யோசித்து வருகிறாராம்.
Post a Comment