மும்பை: அமீர்கான் நடித்து ஹிந்தியில் வெளிவந்த பிகே படம் இந்திய அளவில் இதுவரை வெளிவந்த படங்களிலேயே அதிகளவு வசூலித்த படமாக திகழ்கிறது. கடவுள் இருக்கிறாரா அப்படி என்றால் அவரை எங்கு காணலாம் அவருக்கு ஏன் காசு கொடுக்க வேண்டும் போன்ற சாட்டையடிக் கேள்விகளை எழுப்பிய பிகே இதற்கு எழுந்த எதிர்ப்புகளை வைத்தே இந்தியாவில் நல்ல கல்லாவைக் கட்டியது.
வேற்றுக் கிரகவாசியாக அமீர் நடித்து பட்டையைக் கிளப்பி இருந்தார், இவருக்கு உதவி செய்யும் பெண்ணாக அனுஷ்கா ஷர்மா நடித்து இருந்தார். ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் வெளிவந்த இந்தப் படம் கடந்த மே மாதம் 22 ம் தேதி சீனாவில் வெளியாகியது.
வெளியான நான்கு நாட்களுக்குள்ளேயே சுமார் 40 கோடி ரூபாய் வசூலித்து சாதனை புரிந்துள்ளது, அமீர்கானின் படங்களுக்கு சீனாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது. எனவே இந்தியாவை விட சீனாவில் இந்தப் படம் அதிக தியேட்டர்களில் வெளியிடப் பட்டுள்ளது.
சீனாவில் இதுவரை அதிகம் வசூலித்த இந்தியப் படங்களின் வரிசையில் அமீர்கானின் பிகே, தூம் 3 மற்றும் 3 இடியட்ஸ் படங்கள் உள்ளது குறிப்பிடத் தக்கது.
அடுத்து ஒரு சீனப் படத்தில நேரடியா நடிங்க அமீர் சார்...
Post a Comment