வெற்றி மாறன் சினிமாவில் ஒரு இயக்குநராக அறிமுகமாகி 8 ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை ஆண்டுகளில் அவர் இயக்கியவை இரண்டே இரண்டு படங்கள்தான்.
ஒன்று பொல்லாதவன். அடுத்து, ஆடுகளம். இரண்டிலும் தனுஷ்தான் ஹீரோ.
ஆடுகளம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆன பிறகும் அவரது புதிய படம் எதுவும் வெளியாகவில்லை. விசாரணை படத்தை இப்போது இயக்கி வருகிறார். இந்தப் படத்தை தனுஷுடன் இணைந்து தயாரிக்கிறார்.
இதற்கு அடுத்து அவர் இயக்கப் போகும் படம் வட சென்னை. இதிலும் தனுஷ்தான் ஹீரோ.
இந்த வட சென்னை இன்று நேற்று அறிவிக்கப்பட்டதல்ல. மூன்று ஆண்டுகளுக்கு முன்பே அறிவிக்கப்பட்ட படம். ஆனால் தொடங்க இத்தனை காலமாகியிருக்கிறது.
இந்தப் படம் குறித்த அறிவிப்பை ட்விட்டரில் வெளியிட்ட தனுஷ், வட சென்னை படத்தின் கதை 'பொல்லாதவன்' படத்தின் போதே முடிவானது என்பதையும் குறிப்பிட்டுள்ளார்.
படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிக்க இருக்கிறார். 2016ல் படம் வெளியாகவிருக்கிறதாம்.
Post a Comment