ரஜினி அண்ணனுக்கும் எனக்கும் சந்திரமுகி படத்திலிருந்தே நல்ல நெருக்கம் இருக்கு. அவர் அடுத்த படத்துல நடிக்கக் கூப்பிட்டா கட்டாயம் நடிப்பேன், என்றார் நடிகர் வடிவேலு.
எலி படத்தின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வடிவேலுவிடம், இனி மற்ற நடிகர்களின் படங்களில் காமெடி செய்வீர்களா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், எலி வெளியான பிறகு நிச்சயம் செய்வேன். நிறைய கதைகளும் கேட்டு வைத்திருக்கிறேன், என்றார்.
உங்களை வைத்து படம் தயாரிப்பவர்களுக்கு மிரட்டல் வருவதாகச் சொன்னீர்களே.. இப்போது நிலைமை எப்படி? என்று கேட்டபோது, 'அதெல்லாம் அப்போண்ணே.. இப்பதான் ஒருத்தருக்கு ரெண்டு பேரா வந்திருக்காங்களே படம் தயாரிக்க... இப்போ நிறைய பேர் கேட்டு வராங்க.. நான் நல்ல கதையா தேர்வு செஞ்சு நடிக்கிறேன்," என்றார்.
ரஜினி படத்தில் நடிப்பீர்களா?
நிச்சயமா நடிப்பேங்க. ரஜினி அண்ணனுக்கும் எனக்கும் சந்திரமுகி படத்திலிருந்தே நெருக்கமான உறவிருக்கு. அவர் கூப்பிட்டா எப்ப வேணாலும் நடிப்பேன், என்றார்.
ரஜினி தயாரித்த வள்ளி, ப்ளாக் பஸ்டர் படமான முத்து, சரித்திரம் படைத்த சந்திரமுகி, தோல்வியைத் தழுவிய குசேலன் படங்களில் வடிவேலு நடித்திருக்கிறார்.
Post a Comment