13 வயது சிறுமியுடன் டூயட் பாடிய பிரபல பாப் பாடகர்

|

கனடா: கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் வேண்டுமென்றே சந்தானம் கேவலமாக ஒரு பாட்டைப் பாடுவார் இடையில் பாடலின் வரிகள் தெரியாமல் அவர் தடுமாற , அதனைக் கண்டு மனம் வெதும்பும் விடிவி கணேஷ் நிஜமாகவே அந்தப் பாடலை மேடையேறிப் பாடுவார்.

சினிமாவில் அவ்வப்போது இந்த மாதிரி ஒரு சில காட்சிகள் ஏதேனும் ஒரு படத்தில் கட்டாயம் இருக்கும், அதே போன்று ஒரு சம்பவம் நேரில் நடந்தால் சம்பந்தப் பட்டவரின் மனநிலை எப்படி இருக்கும்.

சினிமாவில் மட்டும் அரங்கேறிய இந்த மாதிரி நிகழ்ச்சிகள் நேரிலும் நடந்து இருக்கிறது, நம்மூரில் அல்ல கனடா நாட்டில்.

கனடாவைச் சேர்ந்த சிட்னி போர்பே என்ற 13 வயது சிறுமி அறக்கட்டளை ஒன்றிற்கு நிதி திரட்டுவதற்காக வெஸ்ட் எட்மாண்டன் என்ற மாலில் நடந்த ஒரு விழாவிற்குச் சென்றிருந்தார்.

விழா மேடையில் நிதி திரட்டுவதற்கு ஏதாவது செய்தாக வேண்டுமே என்ற நல்ல எண்ணத்தில் இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல பாப் பாடகர் எட் ஷீரனின் தி பெஸ்ட் மொமென்ட்( The Best Moment) என்ற பாடலை மிகவும் சுமாராகப் பாடிக் கொண்டிருக்க, திடீரென அங்கு நிஜமாகவே வந்த எட் ஷீரன் விழா மேடையில் ஏறி அந்த சிறுமியுடன் டூயட் ஆடி இருக்கிறார்.

எட் ஷீரனை நேரில் பார்த்த சிட்னி அதை கனவோ என்று எண்ணுவதற்குள் நிஜமான இந்த டூயட் அரங்கேற, சந்தோஷத்தில் சிட்னிக்கு காய்ச்சலே வந்து விட்டதாம்.

யூ டியூபில் இந்த வீடியோவை இதுவரை 55 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்க்க தற்போது இணையத்தில் வைரலாக மாறி விட்டது இந்த டூயட் வீடியோ.

 

Post a Comment