எதிர்பார்ப்பினை எகிற வைக்கும் “கோ 2” - பற்ற வைக்கும் அரசியல் படம்?

|

சென்னை: கே.வி.ஆனந்த் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த "கோ" திரைப்படம் மக்களிடம் சிறப்பான வரவேற்பினைப் பெற்றிருந்தது.

முதல் படமான "கோ"வில் ஜீவா கதாநாயகனாகவும், கார்த்திகா நாயர் கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். அவர்களுடன் பியா பாஜ்பாய், பிரகாஷ் ராஜ், அஜ்மல் ஆகியோரும் நடித்திருந்தனர்.

Upcoming KO 2 film fired with excitement

இரண்டாம் பாகம்:

இந்நிலையில் இப்படத்தின் "சீக்வெல்" எனப்படும் தொடர்ச்சியான "கோ 2" படத்தினை புதுமுக இயக்குனர் சரத் என்பவர் இயக்கி உள்ளார்.

அதே கதை இல்லையாம்:

பொதுவாக சீக்வெல் திரைப்படம் என்றாலே அதே நடிகர்கள், அதே குழுவினர், கிட்டதட்ட அவர்களின் கதையே என்பது போல தயாரிக்கப்படும்.

மாறிய கதைநாயகர்கள்:

ஆனால், கோ 2 படத்திலோ ஜீவாவிற்கு பதிலாக பாபி சிம்ஹாவும், கார்த்திகாவிற்கு பதிலாக நிக்கி கல்ராணியும் நடித்துள்ளனர். பிரகாஷ்ராஜ் மட்டும் வில்லன் இடத்தில் மாறாமல் ஆணியடித்து அமர்ந்திருக்கின்றார்.

இயக்குனரும் புதுசுதான்:

இப்படத்தின் இயக்குனர் சரத், விஷ்ணு வர்தன், சக்ரி டோலெட்டி ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அவருடைய கதைதான் "கோ 2". இப்படத்தினை எல்ரெட் குமார் தாயாரித்து வருகின்றார்.

தாங்கிப் பிடிக்கும் தலைமைப் பண்பு:

கோ என்றால் அரசன் என்றும் தலைமை தாங்கும் பண்புடையவன் என்றும் அர்த்தம்... இந்நிலையில் வெளியாக உள்ள கோ 2ல் கிட்டதட்ட தலைமைப் பதவி ஒன்றில் இருப்பது போலவே பிரகாஷ் ராஜ் அமர்ந்திருக்கும் மோஷன் போஸ்டரும் வெளியாகியுள்ளது.

என்ன களம் கோ 2?:

அவரை துப்பாக்கி முனையில் மிரட்டிக் கொண்டு நிற்கின்றார் பாபி சிம்ஹா. எனவே, அரசியல் சார்ந்த கதைக்களமாக கோ 2 இருப்பதற்கு வாய்ப்புள்ளதாக் எதிர்பார்ப்புகள் இப்போதே எகிறியுள்ளன.

 

Post a Comment