வெளியாவதற்கு முன்னதாகவே தேசிய விருது உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வாங்கிய ‘காக்கா முட்டை'க்கு கர்நாடக அரசு முழுமையான வரிச்சலுகை அளித்துள்ளது.
தமிழகத்தில் சமீபத்தில் வெளியான இப்படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் மணிகண்டன் இப்படத்தை இயக்கியிருந்தார்.
இப்படம் கன்னடத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. கன்னடத்தில் இப்படத்திற்கு அம்மாநில அரசு முழுமையான வரிச் சலுகை கொடுத்திருக்கிறது.
தமிழ் படத்திற்கு கர்நாடக அரசு முழுமையான வரிச்சலுகை கொடுத்திருப்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முன்பு அமிதாப் நடித்த 'பா' படத்திற்கு 50 சதவீத வரிச்சலுகை அளிக்கப்பட்டது.
கர்நாடகாவில் முழுமையான வரிச்சலுகை கிடைத்திருப்பது படக்குழுவினரை சந்தோஷத்திலும் வியப்பிலும் ஆழ்த்தியுள்ளது. விரைவில் படம் மலையாளத்திலும் வெளியாகிறது.
Post a Comment