சிவகார்த்திகேயனின் அடுத்த படம் தொடங்கியது.. முன்னணி கலைஞர்கள் இணைகிறார்கள்!

|

சிவகார்த்திகேயனின் அடுத்த படத் தொடக்கவிழா இன்று சென்னையில் நடந்தது.

24 ஏஎம் ஸ்டுடியோஸ் என்னும் புதிய நிறுவனத்தின் சார்பில் ஆர் டி ராஜா தயாரிக்கும் இந்தப் படத்தை பாக்கியராஜ் கண்ணன் என்பவர் இயக்குகிறார்.

இயக்குனர்கள் சுந்தர்.சி, அட்லீ ஆகியோரிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் இவர்.

Sivakarthikeyan's next movie launched

இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு பிசி ஸ்ரீராம், இசை அமைக்கிறார் அனிருத். அரங்க அமைப்புக்கு டி. முத்துராஜும் படத் தொகுப்புக்கு ரூபனும் பொறுப்பேற்றுள்ளனர்.

Sivakarthikeyan's next movie launched

ஒலி வடிவமைப்பாளர் ஆக ஆஸ்கார் விருதுப் பெற்ற ரசூல் பூக்குட்டி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிக நடிகையர் தேர்வு நடைப் பெற்று கொண்டு இருக்கிறது.

Sivakarthikeyan's next movie launched

'ஒரு படத்தின் உன்னதமான தொழில் நுட்ப கலைஞர் குழு படத்தின் வெற்றியை பெரிதளவு தீர்மானிக்கிறது. எனது முதல் படத்தில் இத்தகைய பிரசித்திப் பெற்ற தொழில் நுட்ப கலைஞர்கள் பணி புரிவது எனக்கு மிக்க பெருமை. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அவர் இதுவரை ஏற்றிராத ஒரு புதிய பாத்திர படைப்பு. இந்த படம் அவரது கலை பயணத்தில் ஒரு முக்கிய படமாக இருக்கும். தொழில் நுட்பகலைஞர்கள் தேர்வைப் போலவே மற்ற நடிக நடிகையர் தேர்வும் மிக மிக பெரியதாக இருக்கும். காதலுக்கும், நகைசுவைக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்தப் படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் என்பதில் ஐயமே இல்லை. என்னுடைய நிறுவனமான 24 ஏஎம் ஸ்டுடியோஸ் தரமான படங்களையும் , உன்னதமான தொழில் நுட்ப கலைஞர்களையும் ஆதரித்து ஊக்குவிக்கும்,' என்கிறார் புதிய தயாரிப்பாளரான ஆர் டி ராஜா.

இந்த ராஜா வேறு யாருமல்ல... சிவகார்த்திகேயனின் மேனேஜராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment