சென்னை: ;சங்கக் கட்டிடத்தின் சுவர்களைப் பிடித்துக் கொண்டு ஆமை நடிகரும், கோழி நடிகரும் மோதி வருகின்றனர். இதனால் சங்கத் தேர்தல் படாத பாடு பட்டு வருகிறது.
இருவரின் பின்னணியிலும் பலர் பக்க பலமாக இருந்து குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், இவர்களில் யாருக்கு உச்சநடிகர்களின் ஆதரவு என்பதை அறிந்து கொள்ளத் தான் தமிழ் திரையுலகமே ஆவலாக உள்ளது.
ஆனால், உச்ச நடிகர்கள் இருவரும் பயங்கர விவரமாக உள்ளார்களாம். இந்த விவகாரத்தில் தப்பித் தவறியும் மூக்கை நுழைத்து விடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறார்களாம். இது தொடர்பாக இருவரும் ரகசியமாக பேசி, ஒரு உடன்படிக்கையும் செய்துள்ளனர். வாயே திறக்கக் கூடாது ப்ரோ என்று பேசி வைத்துக் கொண்டு கப்சிப் என்று இருக்கிறார்களாம். அதன்படி தான் இருவரும் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறார்கள்.
இவ்வாறு உச்ச நடிகர்கள் மவுனம் சாதிப்பதற்குக் காரணம் சம்பந்தப்பட்ட சங்கம் ஆளும் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது தான் எனக் கூறப்படுகிறது. தேவையில்லாமல் இந்தப் பிரச்சினையில் மூக்கை நுழைத்து ஆளும் கட்சியின் கோபத்திற்கு ஆளாக வேண்டாம் என்பது இவர்களின் எண்ணமாம்.
ஏற்கனவே இவர்களின் படங்கள் சமீப காலமாக பல சிக்கல்களைச் சந்தித்து வருவதால் மறுபடியும் புது வம்பை விலைக்கு வாங்க வேண்டாமே என்பதுதான் இவர்களின் அமைதிக்குக் காரணமாம்.
உலக மகா சூப்பரப்பு!
Post a Comment