சென்னை: புலி படத்தையடுத்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் விஜய் 59 படத்தின் ரிலீஸ் செய்தி படக்குழுவினரால், இறுதி செய்யப் பட்டுள்ளது. தமிழ் ரசிகர்கள் அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் புலி திரைப்படம் இந்த வருட விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகிறது.
எனினும் புலி படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் 100% உறுதியாகாத நிலையிலேயே உள்ளது, ஆனால் ஆச்சரியமாக விஜய் இயக்குநர் அட்லீயுடன் இணையும் விஜய் 59 படத்தின் ரிலீஸ் தேதியை இப்போதே உறுதி செய்துள்ளனர் படக்குழுவினர்.
ஏற்கனவே விஜய் நடித்த நண்பன், காவலன் மற்றும் ஜில்லா போன்ற படங்கள் பொங்கல் அன்று வெளியாகி வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. அதோடு பொங்கல் சமயத்தில் படத்தை வெளியிட்டால் கண்டிப்பாக வசூலிலும் சாதனை படைக்கலாம்.
இதையெல்லாம் மனதில் வைத்துத் தான் இந்தத் தேதியை இறுதி செய்து இருக்கின்றனர், ஒருவேளை இந்தத் தேதியில் தாமதம் ஏற்பட்டால் தவிர்க்க முடியாத சூழ்நிலையில் குடியரசு தினம் அன்று படம் வெளியாகும்.
விஜய் 59 படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் இருவரும் நடிக்க, இவர்களுடன் இணைந்து ராதிகா,பிரபு, கே.எஸ்.ரவிக்குமார் போன்ற நட்சத்திரங்களும் நடிக்கின்றனர்.
குடும்பம் + செண்டிமெண்ட் என்ற கலவையில் உருவாக இருக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக பிரபல இயக்குநர் மகேந்திரன் நடிக்கிறார்.
Post a Comment