ரோம்: துபாயில வெயில் கொளுத்துது... ஏரோப்ளேனை அப்படியே இத்தாலி பக்கம் திருப்பு என்று அஜீத் உத்தரவிட்டதன் விளைவு... இப்போ சோனியா காந்தியின் ஊரில் ‘தல 56' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இத்தாலி தேசத்தில் குளுகுளுவென ஸ்ருதிஹாசனுடன் டூயட் பாடி வருகிறார் அஜீத்.
அஜீத் நடித்து வரும் ‘தல 56′ படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் மூன்றாவது கட்ட படப்பிடிப்பிற்காக ‘தல 56′ குழுவினர் அனைவரும் துபாய் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். அதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்பட்டன.
வாட்டும் வெயில்
கடந்த வாரம் துபாய் சென்று லொகேஷன் பார்த்துவிட்டு வந்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம், துபாயில் தற்போது வெயில் அதிகமாக இருப்பதால் அடுத்த மாதம் துபாய் படப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாம் என்ற முடிவில் இருந்ததாகவும் கூறப்பட்டது.
தீபாவளிக்கு ரிலீஸ்
தீபாவளி தினத்தின் ரிலீஸ் செய்ய வேண்டியதுள்ளதால் படப்பிடிப்பை தாமதிக்க விரும்பாத சிறுத்தை சிவா, உடனே துபாய் படப்பிடிப்பை வைத்துக் கொள்ளலாம் என கூறியதாகவும் தகவல்கள் வெளியானது.
ஸ்ருதிஹாசனுடன் டூயட்
லட்சுமி மேனனுடன் முதல்கட்ட படபிடிப்பும், கபீர்சிங் உடன் இரண்டாவது கட்ட படப்பிடிப்பிலும் கலந்து கொண்ட அஜீத், இந்த மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் ஸ்ருதிஹாசனுடன் டூயட் பாட ரெடியாகி வந்தார்.
இத்தாலியில் சூட்டிங்க
துபாயில் வெயில் ஒருபுறம் வாட்டி வதைத்து வந்தாலும், தற்போது ரம்ஜான் நோன்பு கடைப்பிடிக்கப்பட்டு வருவதால் துபாயில் அனுமதி கிடைக்கவில்லையாம். எனவேதான் இப்படக்குழு தற்போது இத்தாலிக்குச் சென்றுள்ளனர்.
அஜீத் - ஸ்ருதி
இத்தாலி நாட்டிலுள்ள மிலன் நகரில் நேற்று முதல் இப்படக்காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. மேலும் அஜித், ஸ்ருதியின் டூயட் முடிந்த உடன் ஜூலை 15ம் தேதிக்குள் இந்தியா திரும்பவுள்ளனர்.
கொல்கத்தாவில் தொடரும்
அஜீத், ஸ்ருதிஹாசன், சூரி, லட்சுமி மேனன், கபீர்சிங் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். இதன் நான்காவது கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடைபெறும் என்று தெரியவந்துள்ளது.
Post a Comment