சென்னை: தீபாவளி தினத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட தூங்காவனம் திரைப்படம் 4 தினங்களுக்கு முன்பாகவே திரையரங்குகளில் வெளியாகும் என்று செய்திகள் கசிந்துள்ளன.
கமலின் நடிப்பில் ஆக்க்ஷன் கலந்த த்ரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் தூங்காவனம் திரைப்படம் தீபாவளி ரேஸில் கலந்து கொள்ளும் என்று சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் வெளியாகின.
தீபாவளிக்கு முதல்நாள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட தூங்காவனத்தை எந்தவித பரபரப்புக்கும் உள்ளாக்காமல் வழக்கம் போல வெள்ளிக்கிழமையில் வெளியிட இருக்கின்றனர் படக்குழுவினர்.
தீபாவளிக்கு சுமார் 4 தினங்கள் முன்னதாக நவம்பர் 6 ம் தேதியில் தூங்காவனம் வெளியாகிறது, படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து தற்போது இறுதிக்கட்டத்தில் தூங்காவனம் நுழைந்திருக்கிறது.
ஏற்கனவே படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பலரின் கவனத்தையும் கவர்ந்துள்ள நிலையில் படத்தின் டிரெய்லரை வரும் செப்டம்பர் 16 ம் தேதியில் படக்குழுவினர் வெளியிட இருக்கின்றனர்.
விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய தினத்தில் சமூக வலைதளங்கள் மூலமாக தூங்காவனம் படத்தின் டிரெய்லர் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
படம் வந்தாலே தீபாவளி தான்...
Post a Comment