சென்னை: ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கவிருக்கும் கபாலி படத்தின் படப்பிடிப்பு வருகின்ற 17 ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்று தொடங்க விருக்கிறது.
படத்தில் முக்கிய வேடங்களில் நடிப்பவர்கள் அனைவரும் உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், தற்போது படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் பற்றிய புதிய குழப்பம் ஒன்று ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
அதாவது இதுவரை படத்தில் ரஜினி தாதாவாக நடிக்கிறார் என்று தகவல்கள் வெளியாகின, படத்தின் இயக்குனரான ரஞ்சித்தும் இதனை உறுதி செய்தார்.
இந்நிலையில், ரஜினி மலேசிய போலீஸ் உடை அணிந்து தோன்றுவது போன்று ஒருசில புகைப்படங்களை படக்குழுவினர் ஷூட் செய்ததாக படப்பிடிப்புத் தளத்தில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளன. இதனால், ரஜினியின் கதாப்பாத்திரம் என்னவாக இருக்கும்? என்கிற குழப்பம் நீடிக்கிறது.
இந்தக் குழப்பமானது ரசிகர்களுக்கு படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. படத்துக்கான பிரம்மாண்ட செட்கள் சென்னை ஈ.சி.ஆர்.-ல் உள்ள பனையூரின் ‘ஆதித்யாராம் ஸ்டுடியோவில்' அமைக்கப்பட உள்ளது.
இந்த அரங்கில் சென்னையில் நடக்கும் காட்சிகளும், மலேசியாவின் பகுதியில் உள்ள உட்புற காட்சிகளும் படமாக்கப்பட உள்ளன. குறுகிய காலத்தில் படத்தை முடிக்க ரஞ்சித் திட்டமிட்டு இருக்கிறார்.
எனவே படம் அடுத்த வருடத்தின் ஆரம்பம் அல்லது பொங்கல் விருந்தாக திரைக்கு வர வாய்ப்புகள் இருக்கின்றன.
Post a Comment