பின்லாந்து: ஒருகாலத்தில் உலகினரையே அடிமைப்படுத்தி வைத்திருந்த ஆங்ரி பேர்ட்ஸ் விளையாட்டு தற்போது தனது பெருமையை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது.
இதனை சரிக்கட்டும் முயற்சியாக ஆங்ரி பேர்ட்ஸ் விளையாட்டை திரைப்படமாக உருவாக்கி வருகிறார், இந்த விளையாட்டை உருவாக்கிய ரோவியோ.
தற்போது 80 மில்லியன் செலவில் ஆங்ரி பேர்ட்ஸ் விளையாட்டு 3D யில் திரைப்படமாக உருவாகி வருகிறது. இதன் மூலம் இழந்த ஆங்ரி பேர்ட்ஸ் புகழை மீட்டெடுக்க முடிவு செய்திருக்கிறார் ரோவியோ.
"தி ஆங்ரி பேர்ட்ஸ்" இதன் முதல் டிரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது. ரெட் எனப்படும் கோபக்கார பறவை, அதைக் கட்டுப்படுத்த முயலும் ஆங்ரி பேர்ட்ஸ்கள் என கதை நகரவிருக்கிறதாம்.
ஆங்ரி பேர்ட்ஸ் ஹீரோவான ரெட்டுக்கு ஜாசன் சுதேய்கிஸ் என்பவரும், பக்கத்துக்கு வீட்டுக்காரராக வந்து ரெட்டை கோபப்படுத்தும் பிக் கதாபாத்திரத்திற்கு பில் ஹாடரும் குரல் கொடுத்துள்ளனர்.
ஒரு காலத்தில் உலகையே தனக்கு அடிமையாக்கி வைத்திருந்த ஆங்ரி பேர்ட்ஸ் கேம் சீரிஸ்க்கு இப்போது ரசிகர்கள் குறைவாகிவிட்டனர். நாளுக்கு நாள் வெளியாகும் ஆண்ட்ராய்டு கேம்கள், புதுப்புது அறிமுகங்கள் என ஆங்ரி பேர்ட்ஸ் ரசிகர்களுக்கு சலித்துப் போய்விட்டது.
இருப்பினும் வேகமாக வளர்ந்துவரும் இணைய கேம் உலகைத் தொடர்ந்து ஆட்சி செய்ய முடியாது ஆங்ரி பேர்ட்ஸ் கொஞ்சம் பின்தங்கியது.
80 மில்லியன் செலவில் உருவாகும் இப்படம், ஆங்ரி பேர்ட்ஸ் கேம் இழந்த புகழை மீண்டும் தேடித் தரும் என, இவ்விளையாட்டை உருவாக்கிய ரோவியோ நம்புகிறார். 3டியில் மே 2016 இல் இப்படத்தை வெளியிட ஆங்ரி பேர்ட்ஸ் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
Post a Comment