ரவி 'சூப்பர்'.. அரவிந்த் சாமி 'வாவ்'... பாராட்டித் தள்ளிய ஷங்கர்

|

சென்னை: கடந்த மாதம் வெளியாகி பலரின் கவனத்தையும் கவர்ந்த தனி ஒருவன் இயக்குநர் சங்கரையும் விட்டு வைக்கவில்லை. சமீபத்தில் தனி ஒருவன் படத்தைப் பார்த்த இயக்குநர் ஷங்கர் படக்குழுவினரை மனந்திறந்து பாராட்டியிருக்கிறார்.

Thani Oruvan (U): இப்போதே உங்கள் டிக்கெட்டை புக்செய்யுங்கள்!

ஜெயம் ரவி, நயன்தாரா, அரவிந்த் சாமி மற்றும் இசையமைப்பாளர் ஆதி ஆகியோரின் பங்களிப்பில் உருவான தனி ஒருவனை இயக்குநர் மோகன் ராஜா பார்த்துப் பார்த்து உருவாக்கியிருந்தார்.

Director Shankar Impressed with Jeyam Ravi's

மோகன் ராஜாவின் 4 வருட உழைப்பை ரசிகர்கள் அப்படியே ஏற்றுக் கொண்டனர். மேலும் திரையுலகினரும் படத்தைப் பாராட்டினர். இந்நிலையில் இயக்குநர் ஷங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பின்வருமாறு கூறியிருக்கிறார்.


படத்தை பற்றி ஷங்கர் கூறும்போது, ‘சமீபத்தில் ‘தனி ஒருவன்' படத்தை பார்த்தேன். மிகவும் பிடிந்திருந்தது. இயக்குனர் ராஜா திறமையாக இயக்கியிருக்கிறார். அற்புதமான நடிப்பை ஜெயம் ரவி வெளிபடுத்தியிருக்கிறார். அரவிந்த் சாமி சிறப்பாக நடித்திருக்கிறார். இசையமைப்பாளர் ஆதியின் பின்னணி இசை அழுத்தமாக பதிந்திருக்கிறது. படக்குழுவினருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்' என்று தனி ஒருவனை பாராட்டியிருக்கிறார்.


இந்தப் பாராட்டால் மகிழ்ந்து போன அரவிந்த் சாமி "நீங்கள் படத்தை விரும்பியது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது. உங்கள் பாராட்டிற்கு நன்றி" என்று தெரிவித்துள்ளார்.

தமிழின் பிரமாண்ட இயக்குனர் என்று பெயரெடுத்த ஷங்கர் தங்கள் படத்தைப் பாராட்டியதில் படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.

தனி ஒருவன் படத்தின் 2 வது பாகம் கண்டிப்பாக வரும் என்று இயக்குநர் மோகன் ராஜா கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment