இப்போதுதான் ஆரம்பித்த மாதிரி இருந்தது... அதற்குள் தூங்காவனம் படம் ரிலீசுக்குத் தயாராகி நிற்கிறது.
கமலின் புது அணுகுமுறைக்குக் கிடைத்த பலன் இது. இதோ தூங்காவனம் குழுவோடு தனது அடுத்த படத்தை அறிவிக்கவும் தயாராகிவிட்டார் கமல்.
இந்தப் படத்தையும் ராஜேஷ் எம் செல்வாதான் இயக்குகிறார். ஆனால் இது முழுக்க முழுக்க காமெடி. படத்தின் கதை, திரைக்கதையை நடிகரும் இயக்குநருமான மவுலி எழுத, வசனத்தை கமலும் இணைந்து எழுதுகிறார்.
'உத்தமவில்லன்' படத்தில் ஏற்பட்ட நஷ்டத்துக்கு ஈடுகட்டும் வகையில், லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனத்துக்கு இன்னொரு படத்தில் நடித்துத் தருவதாக கமல் உறுதியளித்திருந்தார்.
அதன்படி இந்த வாய்ப்பை லிங்குசாமிக்கு கமல் தருவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ரூ 30 கோடி பட்ஜெட்டுக்குள் இந்தப் படத்தை எடுத்துவிட முடிவு செய்துள்ளனர்.
Post a Comment