சங்கம் இப்படி பிளவுபட்டுப் போச்சே... ! - சிம்புவின் கவலை

|

ஒரே குடும்பமா இருக்க வேண்டிய நடிகர் சங்கம் இப்படி பிளவுபட்டு நிற்பது வேதனையாக உள்ளது என்று நடிகர் சிம்பு கூறினார்.

வருகிற நடிகர் சங்க தேர்தலில் சரத்குமார் அணியில் நடிகர் சிம்பு, உப தலைவர் பதவிக்கு சிம்பு போட்டியிடுகிறார். இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலில் இரண்டு அணிகளாக போட்டியிடுவது குறித்து சிம்பு பேசும்போது, "நான் நடிகன், டி.ராஜேந்தரின் மகன், தமிழன்... இதையெல்லாம் தாண்டி ஒரு மனிதன். எனக்குப் பிரிவினை என்பதே பிடிக்காத விஷயம்.

Simbu regrets for the split in Nadigar Sangam

சினிமா என்பது ஒரே குடும்பம். நடிகர் சங்கம் என்பது நடிக்கக் கூடிய ஒட்டுமொத்த நடிகர்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று உருவாக்கப்பட்டது. நான் 14 வயதில் இருந்து நடிகர் சங்கத்தின் கமிட்டியில் இருந்து வருகிறேன்.

எல்லோரும் என்னிடம் ஏன் இளைஞர்கள் அணியில் சேரவில்லை என்று கேட்கிறார்கள். இளைஞர்கள் அணியை நடத்துகிறார்கள், முதியவர்கள் அணியை நடத்துகிறார்கள் என்பது இங்கு முக்கியமில்லை. உண்மை எங்கிருக்கிறது என்பதுதான் முக்கியம். நமக்கு பிரச்சினை என்றால் யார் வந்து முதலில் நிற்பார்கள் என்பதுதான் இங்கு முக்கியம்.

நமக்குள் பிரிவினை இருப்பது என்பது மிகப்பெரிய கவலையளிக்கிறது. எங்கேயும் தப்பு நடக்கிறது என்றால் அதுக்கு குரல் கொடுக்க முதல் ஆளாக வந்து நிற்பேன். இந்த தேர்தலில் யார் ஜெயிக்கிறார்கள்? யார் தோற்கிறார்கள்? என்பது பற்றி கவலை இல்லை," என்றார்.

 

Post a Comment