சென்னை: நடிகை சுருதி ஹாசன் "புலி" படத்தில் நடித்தது மட்டும் விஜயுடன் இணைந்து நடித்தது போன்ற அனுபவங்கள் குறித்து சமீபத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
அக்டோபர் 1 ம் தேதி விஜயின் நடிப்பில் பேன்டஸி கலந்த திரைப்படமாக உருவாகியிருக்கும் புலி உலகம் முழுவதும் வெளியாகவிருக்கிறது.
படத்தில் ஏராளமான நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருப்பது மற்றும் விஜய் முதல்முறையாக சரித்திரப் படத்தில் நடித்திருப்பது போன்ற காரணங்களால், ரசிகர்கள் ஆவலுடன் படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் விஜயுடன் இணைந்து நடித்தது மற்றும் புலி திரைப்படம் ஆகியவை குறித்து நடிகை சுருதிஹாசன் முதல்முறையாக பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
புலி திரைப்படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தது மிகவும் நல்ல அனுபவம். விஜய் எவ்வளவு பெரிய நடிகர், எவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் அவருக்கு பின்னால் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
எனினும் அதையெல்லாம் காட்டிக்கொள்ளாமல் அமைதியாக அவரது வேலையில் மட்டுமே ஈடுபாடு செலுத்துவார். மேலும் விஜய் ஒரு நல்ல பாடகர் என்பது எல்லோருக்குமே தெரிந்த ஒன்றுதான்.
புலி திரைப்படம் கண்டிப்பாக குடும்பமாகப் பார்க்கக்கூடிய படம். படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் வித்யாசமான அனுபவமும், கண்கவர் ஃபேண்டஸி விருந்தும் காத்திருக்கிறது".
என்று விஜயைப் பற்றி நடிகை சுருதிஹாசன் கூறியிருக்கிறார். "புலி" வெளியாக இன்னும் 3 தினங்களே இருப்பது குறிப்பிடத்தக்கது...
Post a Comment