பாகுபலி பார்க்க முடியலையே... சோகத்தில் துபாய் ரசிகர்கள்!

|

பாகுபலி படத்தை உலகமே பார்த்து ரசித்துக் கொண்டாடிய முதல் நாளில், அந்தப் படத்தைப் பார்க்க முடியாமல் தவித்திருக்கிறார்கள் துபாய்வாசிகள்.

துபாயில் பல மொழி மக்கள் வசித்தாலும், தமிழர்கள் கணிசமான எண்ணிக்கையில் உள்ளனர். அங்கு வெளியாகும் தமிழ்ப் படங்களை ஹிட்டடிக்க வைப்பதில் பெரும் பங்கு இவர்களுக்கு உண்டு.

Duabi fans upset over Bahubali

பாகுபலி படம் குறித்த எதிர்ப்பார்ப்பு காரணமாக, இந்தப் படத்தை தமிழில் பார்க்க பல ஆயிரம் ரசிகர்கள் காத்திருந்தனர்.

நேற்று துபாயில் இந்தப் படத்தின் தெலுங்கு மற்றும் இந்தி டப்பிங் மட்டும் வெளியாகின. ஆனால் படத்துக்காக ஆவலுடன் காத்திருந்த பல ஆயிரம் தமிழ் ரசிகர்கள் ஏமாந்துவிட்டனர். காரணம் அறிவித்த அரங்குகளில் தமிழ்ப் பதிப்பு வெளியாகவில்லை.

காலை மற்றும் பிற்பகல் காட்சிகளுக்கு தமிழ்ப் பதிப்பு வெளியாகாததால், ரசிகர்கள் பலரும் டிக்கெட் பணத்தைத் திரும்பப் பெற்றனர். சிலரோ, இந்தி, தெலுங்காக இருந்தாலும் பரவாயில்லை என படத்தைப் பார்த்தார்களாம்.

 

Post a Comment