சென்னை: ஆர்யா - தமன்னா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க. இந்தப் படத்தின் சுருக்கமான டைட்டிலாக வி.எஸ்.ஓ.பி என்று பெயர் வைத்திருந்த படக்குழுவினர், சமீபகாலமாக விளம்பரங்களில் இந்த வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.
காரணம் என்னவென்று விசாரித்தால் பயத்தில் இந்த வார்த்தையை நீக்கி இருக்கின்றனர் என்று கூறுகிறார்கள், அப்படி என்ன பயம் இந்த படக்குழுவினருக்கு காரணத்தை நீங்களும் கேளுங்கள்.
வி.எஸ்.ஓ.பி என்பது ஒரு பிரபலமான மதுபானத்தின் பெயர் இந்தப் பெயரை வைத்தால் படத்திற்கு சுலபமாக விளம்பரம், கிடைத்து விடும் என்ற நல்லெண்ணத்தில் இந்தப் பெயரை தொடர்ந்து விளம்பரங்களில் பயன்படுத்தி வந்தனர்.
தற்போது தமிழ்நாட்டில் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கோரிக்கை மற்றும் அது தொடர்பான விஷயங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன, பூரண மதுவிலக்கை( மதுவே இல்லாத தமிழ்நாடு) தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கோரி ஆங்காங்கே போராட்டங்கள் நாளுக்கு நாள் வலுத்து வருகின்றன.
இந்த நேரத்தில் ஒரு குறிப்பிட்ட மதுவகையை குறிக்கும் வி.எஸ்.ஓ.பி என்ற வார்த்தையை படத்தின் விளம்பரங்களில் பயன்படுத்தினால் போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் படம் வெளியாகும் நேரத்தில் கண்டிப்பாக பிரச்சினையைக் கிளப்புவார்கள்.
எனவே இந்த மாதிரி பிரச்சினைகள் எதுவும் வரக்கூடாது என்று எண்ணிய படக்குழுவினர் தற்போது இந்த சுருக்கமான தலைப்பை பயன்படுத்தாமல், அடக்கி வாசித்து வருகின்றனர்.
டைட்டில்ல பிரச்சினை இல்ல ஆனா படம் முழுக்க "தண்ணி" ஆறா ஓடுதுன்னு பிரச்சினை வந்தா என்ன பண்ணுவீங்க ராஜேஷ் சார்?
Post a Comment