காந்தகார் விமான கடத்தல் சம்பவத்தை மையமாக வைத்து டைரக்டர் மேஜர் ரவி இயக்கும் Ôகாந்தகார்Õ படமும் அதே கதையில் ராதாமோகன் இயக்கும் 'பயணம்Õ படமும் ஒரே நேரத்தில் ஷூட்டிங்கை தொடங்கின. இந்நிலையில் காந்தகார் கதையை முற்றிலும் மாற்றிவிட்டதாக கூறுகிறார் மேஜர் ரவி.இது பற்றி அவர் கூறியது:காந்தகார் கடத்தல் சம்பவத்தை நான் எடுக்கவில்லை. அந்த ஆபரேஷன் தோல்வியில் முடிந்தது. அப்படி எடுத்தால் யாரும் ரசிக்க மாட்டார்கள். அதனால் புதிதாக கதை எழுதி, இப்படத்தை இயக்கி இருக்கிறேன். இதில் விமான பயணிகள் கடத்தல் திட்டம் வெற்றிகரமாக முறியடிக்கப்படும். கமாண்டோ வீரராக மோகன்லால் நடித்திருக்கிறார். விமானத்தில் வரும் பயணியின் தந்தையாக அமிதாப்பச்சன் நடித்திருக்கிறார். கணேஷ் வெங்கட¢ராமன். அனன்யா, ராகினி என பலர் நடித்துள்ளனர். மும்பையிலிருந்து டெல்லிக்கு விமானம் பறக்கும்போது சிறப்பு அனுமதி பெற்று விமானத்துக்குள்ளேயே ஷூட்டிங் நடந்தது. இதை சிரமப்பட்டுதான் எடுத்தோம். மும்பை, பெங்களூர், ஐதராபாத், ஜெய்ப்பூர், டெல்லி என 5 இடங்களில் ஷூட்டிங் நடத்தி முடித்துவிட்டேன். இப்போது டப்பிங் பணி நடந்து வருகிறது. டிசம்பர் மாதம் படம் ரிலீஸ்.
Source: Dinakaran
Post a Comment