விஜய்யின் அரசியல் வசனங்களுக்கு தடை

|

சினிமாவில் விஜய் அடித்தால் சுற்றி இருக்கும் பொருட்கள் தூள் தூளாக உடையும். ஆனால் இப்போதோ அவர் பார்வையிலேயே எல்லாம் உடைந்து விழுகிற அளவுக்கு அவருக்குள் ஆயிரம் கோபம். பொதுவாகவே விஜய் படங்களில் வில்லனை தாக்கிப் பேசுகிற மாதிரியான வசனங்கள்அதிகமாக இருக்கும். அவை அனைத்துமே யாரையாவது மறைமுகமாக தாக்கிப் பேசுகிற மாதிரிஅமைத்திருப்பார்கள். விஜய்யின் காவலன் படத்திலும் அப்படி நிறைய வசனங்கள் இருக்கிறதாம். ஆனால் அது இப்போது விஷயம் இல்லை.

http://nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/ntalkies/hollywood/vijay_kavalan.jpg

இப்போது இருக்கிற நிலையில், தான் நடித்துக் கொண்டிருக்கிற வேலாயுதம் படத்தில் நேரடியாக சிலரை தாக்கிப் பேசுகிற வசனங்கள் அமைத்திருக்கிறாராம் விஜய். தன் பெயரை யாரிடமும் கெடுத்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்த படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் விஜய்யிடம் இதில் அரசியல் வேண்டாம், அரசியல் வசனங்களும் வேண்டாம் என்றாராம். என் ரசிகர்கள் அதைத் தான் எதிர்பார்க்கிறார்கள் என்று விஜய் சொன்னபோதும், படத்தில் பஞ்ச் வசனங்கள் இருக்கட்டும் அதில் அரசியல் வேண்டாம் சொல்லிவிட்டாராம் தயாரிப்பாளர்.
 

Post a Comment