பைக் விபத்து சந்தியா படுகாயம்

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

பைக் விபத்து சந்தியா படுகாயம்

1/10/2011 11:26:26 AM

மோட்டார் பைக்கில் இருந்து தவறி விழுந்த சந்தியாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. மலையாளத்தில் வி.கே.பிரகாஷ் இயக்கத்தில், சந்தியா நடிக்கும் படம், 'த்ரீ கிங்ஸ்'. இந்திரஜித் ஹீரோ. இதன் ஷூட்டிங் கேரளாவில் சாலக்குடி அருகிலுள்ள அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே நடந்தது. மோட்டார் பைக்கில் இந்திரஜித், சந்தியா அமர்ந்து சென்ற காட்சி படமானது. அப்போது இந்திரஜித் பைக்கை வேகமாக ஓட்டினார். பலத்த மழையால் ரோடு சேறும் சகதியுமாக இருந்தது. இதில் நிலைகுலைந்து இருவரும் கீழே விழுந்தனர். இந்திரஜித் லேசான காயத்துடன் தப்பினார். சந்தியா மீது பைக் இன்ஜின் விழுந்து அழுத்தியது. இதில் அவரது இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதைப்பார்த்த படப்பிடிப்பு குழுவினர், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து சந்தியா, தினகரன் நிருபரிடம் கூறும்போது, 'பைக் தடுமாறி விழுந்ததில், அதன் அடியில் சிக்கிக்கொண்டேன். இடது கால் முட்டிப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு ஓய்வு எடுத்து வருகிறேன்' என்றார்.


Source: Dinakaran
 

Post a Comment