2/5/2011 11:59:53 AM
இயக்குனர் மித்ரன் ஆர்.ஜவஹர் ரகசிய திருமணம் செய்துகொண்டார். 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'உத்தமபுத்திரன்' படங்களை இயக்கியவர், மித்ரன் ஆர்.ஜவஹர். திருச்சியை சேர்ந்த இவர், சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் ஜபீன் பானு. இவரது தந்தை புல்லட் பாபு, சினிமா ஸ்டண்ட் காட்சிகளுக்கு ஸ்பெஷல் எபெக்ட் செய்பவர். இருவீட்டு பெற்றோர்கள் சம்மதத்தின் பேரில் மித்ரன் ஜவஹருக்கும், ஜபீன் பானுவுக்கும் கடந்த மாதம் 5&ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து இவர்களின் திருமணம், கடந்த 2ம் தேதி சென்னை ஆல்பட் தியேட்டர் அருகிலுள்ள சிராஜ் மஹாலில் நடந்தது. இயக்குனர் ஷங்கர், பிரசன்னா, விவேக், விஜய் ஆண்டனி ஆகியோர் கலந்து கொண்டனர். திருமண வரவேற்பு நிகழ்ச்சி, இன்று இரவு 7.30 மணியளவில், வடபழனியிலுள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது. திடீர் திருமணம் குறித்து, தினகரன் நிருபரிடம் மித்ரன் ஜவஹர் கூறுகையில், 'இது காதல் திருமணமோ, ரகசிய திருமணமோ கிடையாது. குறுகிய காலத்தில் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்பதால், யாரையும் அழைக்க முடியவில்லை' என்றார்.
Post a Comment