2/7/2011 2:49:51 PM
கே.வி.ஆனந்த் இயக்கும் ‘மாற்றான்’ படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கப் போகிறாராம். அட இதிலென்ன ஸ்பெஷல் இருக்கிறது என்று கேட்பவர்கள் காத்திருக்கிறது அதிசயம். இந்த இரட்டை வேடம் வழக்கமாக தமிழ் தெலுங்கு சினிமாக்களில் வருகிற சமாச்சாரம் அல்ல. இது வேறு மாதிரி. தலையோ, உடலோ ஒட்டி பிறக்கும் இரட்டை குழந்தைகளை ஆபரேஷன் செய்து பிரித்தால் ஆபத்து என்று அஞ்சி அப்படியே வளர்த்து விடுவார்கள். அவர்கள் வளர்ந்த பிறகும் ஒன்றாக சுற்றி, ஒன்றாக சாப்பிட்டு, ஒன்றாக உறங்கி… என்று வாழ்க்கை போகும். அப்படிப்பட்ட வேடத்தில்தான் நடிக்கப் போகிறாராம் சூர்யா. பெரிய சவால் நிறைந்த கேரக்டர் இது. நடிப்பவருக்கு மட்டுமல்ல, பிசிறில்லாமல் அதை எடுப்பவருக்கும் கூட! இரட்டையர்கள¢ வேடத்தில் நடிக்கும் சூர்யா அதற்கான ஹோம்ஒர்க்கில் பிஸியாக இருக்கிறாராம்.
Post a Comment