2/7/2011 2:42:32 PM
'வித்தகன்’ படத்தில் கோர்ட் காட்சிகள் பரபரப்பாக படமாக்கப்பட்டுள்ளதாம். ஹீரோ பார்த்திபனின் வக்கீலாக சுரேஷ்கோபி நடித்திருக்கிறார். இதுபற்றி பார்த்திபன் கூறுகையில் “ஹவுஸ்புல்”, ‘அழகி’, ‘குடைக்குள் மழை’, ‘அம்முவாகிய நான்’ என மென்மையான கதைகளில் ஈடுபாடு காட்டினேன். அதற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இனிரூட்டை மாற்றிக்கொள்ள முடிவு செய்துவிட்டேன்” என்கிறார் பார்த்திபன். “ஆக்ஷன் பாதைக்கு மாறியுள்ளேன். ‘வித்தகன்’ அதற்கான பிள்ளையார் சுழி எனலாம். இனிமேல் என் ரூட்டு இப்படித்தான் இருக்கும். என்னை இயக்கும¢ டைரக்டர்களிடம் ஹீரோ முகம் காட்டும் அதே வேளையில், பிற ஹீரோக்களை வைத்து நான் இயக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது” என்றார் பார்த்திபன்.
Post a Comment