மாஜி கணவர் மீது ஊர்வசி வழக்கு

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

மாஜி கணவர் மீது ஊர்வசி வழக்கு

2/26/2011 10:22:27 AM

நீதிமன்ற உத்தரவுப்படி ஆற்றுக்கால் பொங்கல் விழாவுக்கு மகளை அனுப்பாத, மனோஜ் கே ஜெயின் மீது, ஊர்வசி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். ஊர்வசியும் மனோஜ் கே ஜெயினும் விவாகரத்து பெற்று பிரிந்து வாழ்கின்றனர். இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார். அவர் தற்போது நீதிமன்ற உத்தரவுபடி மனோஜ் கே ஜெயின் பராமரிப்பில் வளர்ந்து வருகிறார். வாரத்தில் 2 நாட்கள் மகளை ஊர்வசி பார்த்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் ஆற்றுக்கால் பகவதியம்மன் கோயில் பொங்கல் விழாவுக்குச் செல்வதற்காக பிப். 18 முதல் 20 வரை மகளை தன்னுடன் அனுப்பவேண்டும் என ஊர்வசி கொச்சி குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதன்படி குழந்தையை அனுப்புமாறு மனோஜுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் குழந்தையை ஊர்வசியிடம் ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து மனோஜ் மீது ஊர்வசி கொச்சி உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார்.


Source: Dinakaran
 

Post a Comment