இசை அமைப்பாளர்கள் சங்க பொன் விழா

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news

இசை அமைப்பாளர்கள் சங்க பொன் விழா

2/26/2011 10:15:13 AM

திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கப் பொன்விழா, சென்னையில் அடுத்த மாதம் 5-ம் தேதி நடக்கிறது. இதுபற்றி இச்சங்கத்தின் தலைவர் கல்யாணசுந்தரம், செயலாளர் சங்கரன், பொருளாளர் ராஜா ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது: திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் பொன்விழா நிகழ்ச்சி மார்ச் 5-ம் தேதி காலை தொடங்கி இரவுவரை நடக்கிறது. விழாவில் 50 இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர், பாடகிகள், 250 இசைக்கலைஞர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் கலந்துகொள்வார்கள். எம்.எஸ்.விஸ்வநாதன்-ராமமூர்த்தி, இளையராஜா முதல் ஜி.வி.பிரகாஷ்குமார் வரை அனைத்து இசையமைப்பாளர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள். இவ்விழாவுக்காக, 7 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. விழா நடைபெறும் இடம் இன்னும் முடிவாகவில்லை.


Source: Dinakaran
 

Post a Comment