ஸ்டன்ட் காட்சிகள் தவிர்க்க முடியாது

|

kollywood news, latest kollywood news, tamil kollywood news, kollywood latest news, kollywood masala, cinema news
ஸ்டன்ட் காட்சிகள் தவிர்க்க முடியாது

4/25/2011 12:45:09 PM

விக்ரம் கூறியது: சினிமாவில் ஸ்டன்ட், மர்டர் போன்ற வன்முறை காட்சிகளை தவிர்க்காதது ஏன்? என்கிறார்கள். சமுதாயத்தில் நடக்கும் சம்பவங்களைத்தான் சினிமாவில் காட்சிகளாக வைக்கிறார்கள். அதை தவிர்க்க முடியாது. 'தெய்வத்திருமகன்Õ தலைப்புக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இது பற்றி இயக்குனரும், தயாரிப்பாளரும் சம்பந்தப்பட்டவர்களிடம் பேசி வருகிறார்கள். சினிமாவை தாண்டி அரசியலுக்கு வருவேனா என்பது எனக்கு தெரியாது. நாளை என்ன நடக்கும் என்பதை இப்போது கணிக்க முடியாது. ஹீரோக்கள் என்ன செய்கிறார்களோ அதை ரசிகர்களும் செய்கிறார்கள். ஒருவர் என் பெயரை பச்சை குத்தியிருந்தார். அவரிடம் மனைவி பெயரை பச்சை குத்த வேண்டியதுதானே என்றபோது அதற்கு மறுத்துவிட்டார். மொட்டை அடித்தால் மொட்டை அடித்துக் கொள்கிறார்கள், உடல்கட்டு ஏற்றினால் அவர்களும் அதை செய்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை நல்வழியில் அழைத்து செல்வதுதான் எனது எண்ணம். ஐ.நா சபையின் மனித குடியேற்ற திட்ட பிரிவின் இளைஞர் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன். இதன் மூலம் உலகம் வெப்பமயமாதலை தடுக்க மரம் நடுவது உள்ளிட்ட பல முயற்சிகளை மேற்கொள்வேன். எனது ரசிகர்கள் மட்டுமல்லாமல் விஜய், அஜீத், சிம்பு உள்ளிட்ட எல்லா நடிகர்களிடமும் பேசி அவர்களின் ரசிகர்களையும் இந்த முயற்சியில் ஈடுபட வைப்பேன்.





Source: Dinakaran
 

Post a Comment