4/25/2011 12:33:18 PM
காதல் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக ஹரிப்பிரியா கூறினார். 'முரண்' படத்தில் சேரனுக்கு ஜோடியாக நடித்து வரும் அவர் கூறியதாவது: 'முரண்' படம் தமிழில் எனக்கு திருப்புமுனை தரும் படமாக இருக்கும். அந்தப் படம் வெளிவந்த பிறகே வேறு தமிழ் படங்களில் நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறேன். கன்னடத்தில் ஒரே நேரத்தில் 3 படங்களில் நடித்து வருகிறேன். மூன்றுமே காதல் படங்கள். இளமையும், அழகும் இருக்கும்போதே நிறைய காதல் படங்களில் நடித்து விட வேண்டும். அதனால் காதல் படங்கள் என்றால் உடனே ஒப்புக் கொள்வேன். வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க இன்னும் கொஞ்சம் வயதாக வேண்டும். தெலுங்கில் ஒரு படத்தில் நடித்து வருகிறேன். ஒரு இந்திப் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை தவிர்த்தேன். காரணம் அந்த ஒரு படத்துக்காக தென்னிந்தியாவில் நான் நான்கு படங்களை இழக்க வேண்டியது இருக்கும்.
Post a Comment