நயன்தாரா இடம் எனக்கு வேண்டாம்! - மேக்னா

|


என்னைப் பார்க்கும் எல்லோரும் நான் நயன்தாரா மாதிரி இருப்பதாகக் கூறுகிறார்கள். நயன்தாரா இடம் உனக்குத்தான் என்கிறார்கள். எனக்கு நயன்தாரா இடம் வேண்டாம். எனக்கென தனி இடம் உள்ளது, என்கிறார் மேக்னா.

காதல் சொல்ல வந்தேன் மூலம் நல்ல நடிகையாக பெயர் வாங்கிய மேக்னா ராஜ், இப்போது 'உயர்திரு 420' படத்தில் நடிக்கிறார். மலையாளத்தில் நிறைய படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் அறிமுகமாகியும் பெரிய வாய்ப்பு அமையாததில் வருத்தமா?

இந்தக் கேள்விக்கு மேக்னா பதிலளிக்கையில், "மலையாளத்தில் நல்ல படங்கள் கிடைத்தன. ஸ்டார் பட வாய்ப்புகளால் மிக்க மகிழ்ச்சி. அனைத்தும் சூப்பர் ஹிட். தமிழில் ஒரு நல்ல வாய்ப்பை எதிர்பார்த்திருந்த நேரத்தில்தான் 'உயர்திரு 420' பட வாய்ப்பு கிடைத்தது.

கவிஞர் சினேகன் ஹீரோவாக நடிக்கிறார். சமீபத்திய படங்களின் எந்த சாயலும் இல்லாத ஒரு திரைக்கதை. இனி நல்ல நல்ல வாய்ப்புகளை இந்தப் படம் ஏற்படுத்தித் தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது," என்றார்.

அடுத்த நயன்தாரா நீங்கதானா?

"நான் நயன்தாரா போல் இருப்பதாக நிறைய பேர் சொல்லுகிறார்கள். மீடியாக்களும் என்னை அவருடன் ஒப்பிட்டு பேசுகின்றன. நயன்தாரா இடத்தை நீங்கள் பிடிப்பீர்களா? என்றெல்லாம் கேட்கிறார்கள். நயன்தாராவின் நடிப்பு எனக்கு பிடித்தமான ஒன்றுதான். ஆனால், எனக்கான இடம் அவருடையது அல்ல. எனக்கென தனி இடம் இருக்கிறது. அதற்கு என்னைத் தயார்ப்படுத்தி வருகிறேன். நயன்தாராவின் திருமணம் குறித்து கருத்து சொல்ல நான் விரும்பவில்லை. அது எனக்கு தேவையில்லாத விஷயமும் கூட,'' என்றார்.
 

Post a Comment