பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் 1942-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 11-ம் தேதி பிறந்தார். கூலி படப்பிடிப்பில் அவருக்கு பெரிய விபத்து ஏற்பட்டது. அமிதாப் பிழைப்பாரா என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது. இந்த விபத்து 26-7-1982 அன்று நடந்தது.
பெங்களூர் பல்கலைக்கழக வளாகத்தில் அமிதாப்புக்கும், நடிகர் புனீத் இஸாருக்கும் இடையேயான சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது அமிதாப் உயரத்தில் இருந்து மேஜையில் விழுந்து பிறகு தரையில் விழ வேண்டும். மேஜை மீது விழுந்தபோது அதன் முனை அமிதாப் வயிற்றை பதம்பார்த்துவிட்டது.
இதையடுத்து அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆகஸ்ட் 2-ம் தேதி தான் கண் விழித்தார். இந்த விபத்தால் அவர் பல மாதங்கள் மருத்துவமனையில் இருந்தார்.
தான் மறுபிறவி எடுத்த நாளை அமிதாப் இன்னொரு பிறந்தநாளாகவே கருதுகிறார்.
Post a Comment