2012-ல் ஜெனிலியா - ரிதேஷ் திருமணம்

|


ஜெனிலியா – ரிதேஷ் தேஷ்முக் திருமணம் உறுதியாகியுள்ளது. 2012-ல் இரு வீட்டார் சம்மதத்தோடும் இந்த திருமணம் நடக்கும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெனிலியா – ரிதேஷ் காதலை மணமகன் வீட்டார் ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக, இரண்டு புதிய படங்களில் இருவரும் இணைந்து நடிக்க சம்மதம் தந்துள்ளார்களாம்.

இந்திரகுமாரின் மஸ்தி 2 மற்றும் புது இயக்குநர் மன்தீப் குமார் இயக்கும் புதிய படங்களில் ஜெனிலியாவும் ரிதேஷும் ஜோடியாக நடிக்கின்றனர்.

இருவரும் சேர்ந்து நடித்த முதல் படம் துஜே மேரி கஸம். 2003 ல் வெளியானது. அப்போதே இருவருக்கும் காதல் என்று செய்தி வெளியானது. இருவரும் கோவா சர்ச்சில் திருமணம் செய்ய திட்டமிட்டு, அதை அன்றைய மராட்டிய முதல்வராக இருந்த விலாஸ்ராவ் தேஷ்முக் (ரிதேஷின் தந்தை) தடுத்துவிட்டதும் நினைவிருக்கலாம்.

இப்போது, ஒரு வழியாக மணமகன் வீட்டுத் தரப்பில் சமாதானமாகி திருமணத் தேதியை அறிவிக்கவும் தயாராகிவிட்டார்களாம். இதன் முதல்படிதான் புதிய படங்கள் இரண்டில் இருவரும் இணைந்து நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளனராம்.

விலாஸ்ராவ் தேஷ்முக் வீட்டுக்கு மருமகளாக ஒரு நடிகை வருவது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே ரிதேஷின் அண்ணன் அமித் ஒரு டிவி நடிகையைத்தான் திருமணம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post a Comment