8/3/2011 5:39:35 PM
நடிகை த்ரிஷாவுக்கு இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணம் இல்லை என்று அவரது அம்மா உமா கூறினார். கடந்த சில தினங்களுக்கு முன் பேட்டியளித்த த்ரிஷா, "பெற்றோர் பார்த்து செய்து வைக்கும் திருமணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. அதனால் காதல் திருமணம்தான் செய்வேன்" என பேட்டியளித்தார். "தற்போதைக்கு நான் யாரையும் காதலிக்கவில்லை. விரைவில் காதலர் கிடைப்பார் என நம்புகிறேன்" என்றும் அவர் கூறினார். இதற்கிடையே திரையுலகை சேர்ந்த ஒருவரை த்ரிஷா காதலித்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் த¢ரிஷாவுக்கு செப்டம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற இருப்பதாகவும் இந்த ஆண்டுக்குள் திருமணம் நடக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது பற்றி கேட்டபோது, த்ரிஷா மறுப்பு தெரிவித்தார். இது குறித்து த்ரிஷாவின் அம்மா உமா கூறியதாவது: த்ரிஷாவுக்கு திருமண ஏற்பாடு நடக்கவில்லை. த்ரிஷா மனதில் என்ன இருக்கிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவருக்கு எப்போது திருமணம் நடந்தாலும் அது வெளிப்படையாகவே நடக்கும். தமிழ், தெலுங்கு படங்களில் த்ரிஷா பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். திருமணம் பற்றி இப்போதைக்கு அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை. சினிமாவில் அவர் சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது. இதனால் திருமணம் பற்றி வந்த செய்திகளில் உண்மையில்லை. இவ்வாறு உமா கூறினார்.
Post a Comment