வித்தியாச கேரக்டர் : அம்பிகா ஆசை!
8/3/2011 12:03:09 PM
8/3/2011 12:03:09 PM
வித்தியாசமான கேரக்டர்களில் நடிக்க விரும்புகிறேன் என்றார் அம்பிகா. இதுபற்றி அவர் கூறியதாவது: 'அவன்-இவன்' படத்தில் எனது கேரக்டருக்கு வரவேற்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி. இனி ஏனோதானோ வேடங்களில் நடிக்க மாட்டேன். குறிப்பிட்டு சொல்லக்கூடிய, வித்தியாசமான கேரக்டர் கிடைத்தால் நடிப்பேன். மலையாளத்தில் ஷஜிலால் இயக்கும் படத்தில் இப்போது நடித்து வருகிறேன். இது விருது வாங்கும் நோக்கில் உருவாகும் படம். இந்த வேடம் எனக்கு திருப்புமுனையாக இருக்கும் என நினைக்கிறேன். இன்னொரு மலையாள படத்திலும் நடிக்கிறேன். மலையாளத்தில் நான் இயக்கும் 'அண்ணபெல்லா' படத்தின் ஷூட்டிங் இன்னும் முடியவில்லை. இவ்வாறு அம்பிகா கூறினார்.
Post a Comment