தன்னம்பிக்கை, திறமை இருந்தால் சினிமாவில் ஜெயிக்கலாம் : பாக்யராஜ்!

|

http://cinema.dinakaran.com/cinema/gallery/Kollywood-news-3224.jpg
எஸ்.வி.பி புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.வி.பாபு தயாரிக்கும் படம், ‘யுவன்’. சித்தார்த் ராஜ்குமார் ஹீரோ. ரகுல் பிரீத்தி சிங் ஹீரோயின். ஒளிப்பதிவு, ஏ.வெங்கடேஷ். இசை, ஜோஸ்வா ஸ்ரீதர். பாடல்கள், விவேகா. இயக்கம், ஆர்.என்.சரண். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. பாடலை  வெளியிட்டு பாக்யராஜ் பேசும்போது, ‘‘உதவி இயக்குனராக பணிபுரிந்தால்தான், பிறகு இயக்குனராக முடியும் என்று சொல்ல முடியாது. இப்படத்தின் இயக்குனர் சரண் என்கிற சரவணன், என் அலுவலகத்தில் வேலை பார்த்தார். சரவணனுக்கு இருந்த சினிமா ஆர்வத்தைக் கண்டு ‘பிற்காலத்தில் பெரிய இயக்குனராக வருவாய்’ என்று அப்போது வாழ்த்தினேன். அந்த வாழ்த்து பலித்து, இப்போது இயக்குனராகியுள்ளார். கடுமையான உழைப்பும், தன்னம்பிக்கையும், திறமையும் இருந்தால் கண்டிப்பாக சினிமாவில் ஜெயிக்கலாம்’’ என்றார். விழாவில் படத்தில் நடித்த நடிகர், நடிகைள், இயக்குனர்கள் பிரபு சாலமன், ஏ.வெங்கடேஷ், எடிட்டர் சுரேஷ் அர்ஸ், பாடலாசிரியர் விவேகா, தயாரிப்பாளர் எஸ்.வி.பாபு கலந்து கொண்டனர். ஆர்.என்.சரண் நன்றி கூறினார்.
 

Post a Comment