9/12/2011 10:03:00 AM
ஊதிய உயர்வு குறித்து பெப்சியுடன் தயாரிப்பாளர்கள் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நேற்று நடந்தது. சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் ராதாரவி மற்றும் நிர்வாகிகள், நடிகர், நடிகைகள் கலந்துகொண்டனர். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: முதல்வராக பொறுப்பு ஏற்ற ஜெயலலிதா, சட்டசபை உறுப்பினர் பொறுப்பேற்ற முன்னாள் முதல்வர் கருணாநிதி, எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த், எம்எல்ஏக்கள் சரத்குமார், அருண்பாண்டியன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவிக்கப்படுகிறது. தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் ஆகியவை உடனடியாக தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் (பெப்சி) ஊதிய உயர்வு குறித்து பேசி படப்பிடிப்புகள் சுமூகமான முறையில் நடக்க வழிவகுக்க வேண்டும். இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ப¤ன்னர் நிருபர்களிடம் சரத்குமார் கூறியதாவது: புது நடிகர், நடிகைகள் அக்டோபர் 31ம் தேதிக்குள் சங்கத்தில் உறுப்பினராக சேர வேண்டும். சங்க உறுப்பினர்களின் வாரிசுகள் படிப்பதற்காக, எல்.கே.ஜி முதல் 5ம் வகுப்பு வரை இதுவரை அளிக்கப்பட்ட ரூ2 ஆயிரம் உதவித் தொகை, இனி ரூ2,500ஆக அளிக்கப்படும். 6வது முதல் 10வது வரை படிப்பவர்களுக்கு இனி ரூ3 ஆயிரம் வழங்கப்படும். பிளஸ் ஒன், பிளஸ் டூ படிப்பவர்களுக்கு ஸி3 ஆயிரத்தில் இருந்து ஸி4 ஆயிரமாக உதவித் தொகை உயர்த்தப்படுகிறது. மேற்படிப்புக்கு இனி ரூ7,500 வழங்கப்படும்.
Post a Comment